நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ரஷ்யா உக்ரைன் நாட்டில் இப்போது லட்சக்கணக்கில் அவர்களது போர் வீரர்களை அங்கு குவித்துள்ளது. ரஷ்யாவிடம் ஐ நா அமைப்பும் வேண்டுகோள் வைத்தது போரை கைவிடுமாறு, ஆனால் அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்வதாக தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு புட்டின் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டில் ரஷிய படைகள் தாக்கத் தொடங்கி உள்ளனர் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்யா நடத்தி உள்ளது என்று உக்ரைன் நாட்டின் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பில் ரஷ்யா தரப்பில் 7 விமானங்களும், ஹெலிகாப்டர்களும், மற்றும் 30க்கும் மேற்பட்ட பீரங்கிகளும் சேதம் அடைந்து விட்டன ரஷ்யாவின் தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு அளித்துள்ளோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும் உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா படையை சேர்ந்த 1000 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் இன்று அறிவித்துள்ளது