பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் கழக தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது இது தொடர்பாக மேலிடத்தில் பேசிவிட்டு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்று கூறினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

தற்போது வந்திருக்கும் செய்திகள் படி 1 முதல் 9வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை என அறிவித்துள்ளது. மேலும் விடுமுறைக்கு பின் ஜூன் 13ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு.

மேலும் ஜூன் 23 ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.