பெண்களின் மார்பகத்தில் சூடு வைத்தல்… இப்படியெல்லாமா தண்டனை குடுத்தாங்க ? | Top 5 பண்டைய கால கொடூர தண்டனைகள்

தண்டனைகள் மிக மோசமாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும் என்பதில் அக்காலங்களில் வாழ்ந்த மக்கள் உறுதியாக இருந்துள்ளனர். அதனாலேயே நாம் கற்பனையிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல கொடுமையான தண்டனை குற்றவாளிகளுக்கு கொடுத்துள்ளனர். அவற்றில் ஐந்து மோசமான தண்டனைகளைப் பற்றி தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

Wooden Horse :- மரத்தினாலான குதிரை வடிவம் போன்ற அமைப்புகளின் மீது கத்தியோ அல்லது கூர்மையான கம்பிகளையோ பொருத்தி அதன் மீது குற்றவாளிகளை உட்காரவைத்து கொடுக்கும் இந்த தண்டனை 17ஆம் நூற்றாண்டில் ரோம மற்றும் மேற்கு பகுதிகளில் அதிகமாக காணப்பட்டது. ரோமானிய குற்றவாளிகளை இந்த அமைப்பின் மீது உடலில் கொஞ்சம் கூட ஆடையில்லாமல் கை கால்கள் கட்டிய நிலையில் இறக்கும்வரை உட்கார வைத்து விடுவார்கள். அப்படியும் உயிர் போகவில்லை என்றால் கால்களில் எடையை அதிகரித்து அதன் மூலமாக மரண தண்டனையை நிறைவேற்றுவார்கள்.

Elizabeth Bathory Iron Maiden :- 16ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்து குற்றவாளிகளுக்கு அதிக அளவில் கொடுக்கப்பட்ட தண்டனை இதுதான். எலிசபெத்தின் உருவம் கொண்ட உட்புறத்தில் பல கூர்மையான ஊசி களுடைய கூண்டுனுள் குற்றவாளியை ஆடையின்றி அடைத்து கொஞ்சம்கூட அசையவிடாமல் சித்திரவதை செய்வார்கள். பின்னர் இடையில் குற்றவாளிகளுக்கு சில கேள்விகள் கேட்கப்படும் அதற்கு அவர் சரியாக பதில் சொன்னால் காயங்களுடன் தப்பிக்கலாம். இல்லை என்றால் எந்த அசைவும் இல்லாமல் சாகும் வரை அந்த கூண்டினுள் தான் இருக்க வேண்டுமாம்.

Garrote Torture : – அதிகமாக குற்றங்கள் செய்பவர்களுக்கு இந்தியாவில் எப்படி தூக்கு தண்டனை வழங்குகிறார்களோ, அதேபோன்று பிலிப்பைன்ஸ் நாட்டில் குற்றவாளிகளுக்கு வழங்கும் மிக மோசமான தண்டனை இதுதான். குற்றவாளிகளின் கழுத்தில் பூட்டி கழுத்தின் பின்புறத்தில் இருந்து கூர்மையான இரும்பினை மெதுவாக நுழைத்து மரண தண்டனையை நிறைவேற்றுவார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை பிலிப்பைன்சில் இருந்த இந்த தண்டனை இருந்தது. பின்பு ஸ்பானிஷ் ஆதிக்கத்தின் போது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

Breast Ripper :- பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட இந்த தண்டனையை பண்டைய ஜெர்மானிய பகுதிகளில் அதிக அளவில் இருந்துள்ளது. அதாவது பெண் சிசுக் கொலை விபச்சாரம் செய்யும் பெண்களுக்கு ஜெர்மனி அரசு பொதுவாக கொடுக்கும் தண்டனை இதுவாகும். கூர்மையாக உள்ள இணைப்பில் சூடேற்றி அதனை உடல் பாகங்களில் வைப்பதன் மூலம் தண்டனையை நிறைவேற்றுவார்கள். குறிப்பாக குற்றவாளி வாழ்நாள் முழுவதும் தன் தவறை உணர வேண்டும் என்பதற்காகவே இந்த தண்டனை கொடுக்கப்படும்.

Breaking Wheel :- பண்டைய காலங்களில் விதிக்கப்பட்ட மரண தண்டனைகளிலேயே இதுதான் மிகக் கொடுமையானது. அதாவது ஊசிகள் பதித்த சக்கரத்தின் மீது குற்றவாளிகளை கட்டிவிடுவார்கள். பின் கீழே நெருப்பை பற்றவைத்து குற்றவாளியின் உயிர் போகும் வரை அந்த சக்கரத்தை சுற்றுவார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மன் ரோம் ரஷ்யா மற்றும் ஸ்வீடன் பகுதிகளில் இந்த தண்டனையை அதிக அளவில் இருந்துள்ளது. தற்போதுள்ள பஞ்சாப் பகுதியை 1746ல் ஆட்சி செய்த மன்னரும் இதே போன்ற தண்டனையை குற்றவாளிகளுக்கு கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் செல்ல அனுமதி இல்லாத உலகில் 5 மர்ம இடங்கள்

Spread the love

Related Posts

அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் | தமிழக அரசு அதிரடி உத்தரவு

அரசு பணியில் இருப்போர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என

நாங்க தான் டாப்… மீண்டும் ட்விட்டர் போரை தொடங்கிய அஜித் விஜய் ரசிகர்கள் | கலவர பூமியானது ட்விட்டர்

ரொம்ப நாளாக ஓய்வில் இருந்து அஜித் விஜய் ரசிகர்கள் மோதல் தற்போது ட்விட்டரில் வெடித்துள்ளது. காரணம்

ஆன்மிகத்தில் இருக்கும் அறிவியல் உண்மைகள் | முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல

நம் முன்னோர்கள் மற்றும் நமது ஆன்மிகத்தில் குறைப்பட்டுவுள்ள 5 விஷயங்களுக்கு பின்னால் இருக்கும் அறிவியலை தான்

x