நாளை மறுநாள் இயக்குனர் டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் சமீபத்தில் நெஞ்சுவலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு வயிற்று பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. மேல் சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதற்காக விசா எடுப்பதற்கான பணிகளில் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாளை மறுநாள் டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது குடும்பத்தினர் மருத்துவர் மற்றும் செவிலியரும் அவர்களுடன் அமெரிக்காவுக்கு பயணம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
