டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து பரபரப்பு ரிப்போர்ட்டை வெளியிட்ட சிம்பு | என்ன சொன்னார் தெரியுமா ?

இயக்குனர் நடிகர் மற்றும் இசை அமைப்பாளருமான பன்முகத் திறமை கொண்ட நடிகர் டி ராஜேந்தர்க்கு திடீரென நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர் இந்த சம்பவம் நேற்று முழுவதும் இணையதளத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

டி ராஜேந்தர், அவரைப் பிடிக்காத ஆட்களே இருக்க முடியாது. அந்த காலகட்டங்களில் இயக்கம் தொடங்கி இசை, வசனம், பாடல் வரிகள் என எல்லாவற்றையும் ஒரே ஆளாக சுமந்து அதை நன்றாகவும் செய்து வந்தவர். அப்படிப்பட்ட ஒரு நபருக்கு திடீரென்று இந்த நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரின் ரசிகர்களும், சிம்புவின் ரசிகர்களும் பதட்டம் அடைந்தனர்.

இதுகுறித்து தற்போது அவருடைய நிலைமை என்ன என்பதை சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் கூறியதாவது :- “எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் உடல் நலம் கருதியும் அவர் சிகிச்சைக்காகவும் தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழுவதும் உடல் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். பிரார்த்தனைகளுக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி” என அந்த அறிக்கையில் கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் டிஆர் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Spread the love

Related Posts

பாமகவின் புதிய தலைவராக நியமனம் ஆனார் அன்புமணி ராமதாஸ் | கட்சி தொண்டர்கள் உற்சாகம்

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக இன்று திருவேற்காடு பொதுக்குழு கூட்டத்தில் பதவி ஏற்றார் அன்புமணி

“ஒரு பக்கத்த தான காட்டுனீங்க….” ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்த நாகினி ஹீரோயின்

நாகினி சீரியலில் வந்து ரசிகர்களை பரவசப்படுத்திய நடிகை மௌனி ராய் தற்போது மாலத்தீவில் டாப்லெஸ் ஆடையுடன்

500 கோடி ரூபாய் இழப்பீடு விவகாரம் ! RS பாரதிக்கு சவால் விட்ட அண்ணாமலை !

48 மணி நேரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடுக்கப்படும் என

Latest News

Big Stories