சென்னை அணிக்காக 14 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட தீபக் சஹர் தற்போது காயம் காரணமாக ஐபிஎல் தொடர் முழுவதும் ஆட மாட்டார் என்று அறிவிப்பு வந்துள்ளது.
கடந்த மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் தீபக் சஹரை சென்னை அணி 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது 2022 ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இரண்டாவது பெரிய வீரர் இவர் தான். இவர் ஏற்கனவே சென்னை அணிக்கு ஒரு நட்சத்திர வீரராக திகழ்ந்தவர். இப்படிப்பட்ட இவரை எப்படியாவது நாம் டீமில் எடுத்துவிட வேண்டும் என்று சென்னை அணி கங்கணம் கட்டிக் கொண்டு 14 கோடிவரை போய் ஏலத்தில் எடுத்து மாஸ் காட்டியது.
ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் காயம் ஏற்பட்டதன் காரணமாக இவர் பெங்களூருவில் சிகிச்சையில் இருந்து வந்தார். தற்போது சென்னை அணி பெங்களூருவில் இருக்கும் அந்த சிகிச்சையைப் பற்றி விவரிக்கும்போது தான் தெரியவந்தது இவரால் முழு ஐபிஎல் தொடரும் ஆட முடியாது என்று. இவருக்கு ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு நிறைய நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்றும் தெரியவந்துள்ளது. இதன்படி தீபக் சஹர் ஐபிஎல் முழுவதையும் ஆடுவது சந்தேகம் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
Read More: சி.ஸ்.கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்
சென்னை அணியில் ஒரு நட்சத்திர வீரராக திகழ்ந்த தீபக் சஹர் காயம், சென்னை அணிக்கு மிகப்பெரிய அடியாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருதி வருகின்றனர். தற்போது தீபக் சஹர்ற்கு பதிலாக மாற்று வீரர் சென்னை அணிக்கு யார் வருவார் என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.