உத்திரபிரதேசத்தில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் தண்டவாளத்திற்கு நடுவில் சிக்கி பைக் மீது ரயில் ஏறிய வீடியோ பார்ப்பவர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் எட்டாவாவில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. ரயில்வே கிராசிங்கில் ஒரு பைக் ஓட்டி தண்டவாளத்தில் சிக்கி இருப்பதை வீடியோ காண்பிக்கிறது. அந்த வழியாக ஒரு ரயில் மீது ஏறி அந்த பைக்கு துண்டு துண்டாக சிதறுகிறது. ரயில் வருவதற்கு முன்பு எப்படியாவது தண்டவாளத்தை கடந்து விடலாம் என எண்ணி தந்த தண்டவாளத்தை கடக்க முயன்றி இருக்கிறார் அந்த வாகன ஒட்டி.

உடனே ரயில் மிகவும் வேகமாக வருவதை எண்ணி அங்கிருந்தவர்கள் எல்லாம் சற்று தூரமாக ஒதுங்கினர். ஆனால் அந்த வாகன ஓட்டி மட்டும் வாகனத்தை திருப்ப முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார். பிறகு நாம் கீழே இறங்கி வாகனத்தை தள்ளி தள்ளியாவது எடுத்து விடலாம் என எண்ணினார். ஆனால் அந்த முயற்சியும் பயன் அளிக்கவில்லை. பின்னர் தன்னுடைய உயிரை காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பைக்கை அப்படியே விட்டு விட்டு ஓரமாக ஒதுங்கினார். மிக வேகமாக வந்த ரயில் அந்த பைக்கின் மீது ஏறி பைக் சுக்கு சுக்கா நொறுங்கியது. ஒரு நொடி தாமதமாக இருந்திருந்தால் அந்த நபரும் ரயிலில் அடிபட்டு இருப்பார்.

இதனால் இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்தியாவில் அதிகபட்சமாக சாலை விபத்துகளில் உத்தரபிரதேசம் தான் முதலில் உள்ளது (24,711) அதற்கு அடுத்ததாக தமிழகம் உள்ளது (16,685) அதேபோல 2020 இல் மூன்று லட்சமாக இருந்த சாலை விபத்து 2021 இல் நாலு லச்சமாக அதிகரித்துள்ளது.
Was there any hurry? A man of Etawah of Uttar Pradesh had a narrow escape after his bike got stuck on railway track. #trainaccident #TRAIN #Viral #ViralVideo #Trending #TrendingNews #Etawah #UttarPradesh pic.twitter.com/H1jd7dClhB
— Bhaskar Mukherjee (@mukherjibhaskar) August 29, 2022