மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு திருவிழாவில் பழங்குடி பெண்ணை நான்கு நபர்கள் பாலியல் ரீதியில் தூண்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின பெண்களிடம் கும்பலாக சில இளைஞர்கள் வம்பிழுத்து பாலியல் ரீதியில் சீண்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். பகோரியா என்று அழைக்கப்படும் இந்தத் திருவிழா பில்ஸ் எனப்படும் பழங்குடி இனத்தவர்கள் நடத்தப்படும் ஒரு திருவிழாவாகும். இது கிட்டத்தட்ட ஒரு சுயம்வரம் சார்ந்த ஒரு நிகழ்ச்சி என்று சொல்லலாம்.
அதில் இருக்கும் ஆண்கள் தங்களுக்கு எந்த பெண்ணுடன் சேர வேண்டும் என்று விருப்பப்படுகிறார்களோ அவர்களுக்கு வண்ணப் பொடிகளை முகத்தில் பூசி தனது காதலை வெளிப்படுத்தலாம். அந்த பெண்ணும் அந்த ஆணை பிடித்தால் அதேபோன்று வண்ணப் பொடிகளை பூசலாம். அப்படிப்பட்ட ஒரு சுயம்வரம் திருவிழாவில் பழங்குடியின பெண்ணை காவி குண்டு அணிந்த சில இளைஞர்கள் பாலியல் ரீதியாக தூண்டுவது அரங்கேறி உள்ளது. இதற்கு பதில் அளித்த அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீடியோவில் பெண்களிடம் அத்துமீறி அவர்களை அடையாளம் காணப்பட உள்ளது. இது குறித்து டிஜிபியிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
This video is from MP, India. tribal Women being sexually harassed & assaulted in full public view. This is horrifying. Such women are subjected to this daily, because they belong to the oppressed section of the society, Tribal. #TribalLivesMatterpic.twitter.com/vUein71imK
— Tribal Army (@TribalArmy) March 13, 2022