நேற்று திருச்சிக்கு துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக வந்திருந்த நடிகர் அஜித்திற்கு காவல் பணிக்காக சென்றிருந்த டிசி ஸ்ரீதேவி அவர்கள் நடிகர் அஜித்தை நைஸ் ஜென்டில்மேன் என புகழ்ந்துள்ளார்.
நேற்று அஜித் அவர்கள் திருச்சி வந்ததை அடுத்து திருச்சி டெபுட்டி கமிஷனர் ஸ்ரீதேவி அவர்கள் அங்கு சென்று கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். அதன் பிறகு நடிகர் அஜித்குமாரை நல்லபடியாக காரில் ஏற்றி அனுப்பிவிட்டு சென்றார். இது குறித்து ஒரு தனியார் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த டெபுட்டி கமிஷனர் ஸ்ரீதேவி அவர்கள் “அஜித் ஒரு நைஸ் ஜென்டில்மேன்” என கூறி இருக்கிறார்.

இதைப் பற்றி மேலும் பேசிய அவர் :- “ரசிகர்கள் மிகவும் ஒத்துழைத்தார்கள், நான் மைக்கில் அறிவித்ததுமே எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அஜித் சார் கொஞ்சம் பிஸியா இருக்காரு அவர் அவசரமா கிளம்பனும் நீங்க பாத்துட்டு போயிருங்கன்னு சொன்னேன் கயிறும் கட்டி இருந்தது அந்த கயிறு தாண்டி ஒருத்தர் கூட வரல நான் சொன்னதை கேட்டுகிட்டு அமைதியா இருந்துட்டாங்க. அவரைப் பார்த்தால் கிளம்பி விடுவீர்களா என்று கேட்டேன் அவர்களும் அதற்கு உடனே சம்மதம் தெரிவித்தனர்.
அதை நான் அஜித் சாரிடம் தெரிவித்தேன். அவரும் உடனே வெளியே வந்து பார்த்தார். அவர் பார்த்த ஐந்தாவது நிமிடத்திலேயே அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். ரசிகர்களால் தான் இது எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக முடிந்தது. அவர்களும் உறுதி அளித்தபடி நாகரீகமாக அங்கிருந்து சென்று விட்டனர். அதனால் எந்த பிரச்சனையும் அங்கு ஏற்படவில்லை. அஜித் சாரை பார்த்ததும் அவர்கள் திருப்தி அடைந்து விட்டார்கள். மேலும் அஜித் சார் வருவதாக எனக்கு எந்தவித தகவலும் தெரியவில்லை. கூட்டம் கூடியதும் நான் அந்த தகவல் அறிந்து சென்றேன்.

இது முன்கூட்டியே எங்களுக்கு தெரிந்திருந்தால் அதிக போலீஸ் படையினரை அங்கு குவித்திருப்போம். நிகழ்ச்சி நடந்த இடத்தில் எல்லாமே கண்ணாடிகள் தான். அங்கிருந்த கூட்டம் கொஞ்சம் கட்டுப்பாட்டை இழந்து இருந்தாலும் பெரும் விபத்தை சந்தித்திருக்கும். அதனால் எங்களுக்கு தான் பிரச்சனையாக இருக்கும் ஆனால் அந்த ரசிகர்கள் அப்படி செய்யவில்லை நாகரிகமாக அங்கிருந்து அஜித்தை பார்த்ததும் கிளம்பி விட்டனர். அஜித் சாரும் அதற்கு ஏற்ப இருமுறை வந்து பார்த்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் ரசிகர்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது நீங்க சொல்லுங்க நான் அதை செய்கிறேன் நான் காத்திருந்து கூட போறேன் எனக்கு பிரச்சனையே இல்லை என அஜித் சார் நாங்க சொன்னபடி எல்லாம் செஞ்சாரு.
மேலும் நிறைய ஒத்துழைப்பை எங்களுக்கு கொடுத்தாரு. அவர் வந்து வெளியே நின்றதுமே எல்லாரும் ஹேப்பி ஆயிட்டாங்க. போலீஸ்காரர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றின்னு சொல்லிட்டு கிளம்புனாரு. என்னிடம் மட்டுமல்ல கான்ஸ்டபிள் வரைக்கும் அனைவரிடமும் பேசி நன்றி சொன்னாரு. உண்மையிலேயே அவர் ஒரு நைஸ் ஜென்டில்மேன் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் எந்தவித வழக்கும் பதியவில்லை வழக்கு பதியும் அளவிற்கு அங்கு எதுவும் நடக்கவும் இல்லை வன்முறையும் வெடிக்க வில்லை அதனால் எங்களுக்கு அதுவே பெரும் நிம்மதி.

குடும்பங்கள் குழந்தைகள் அதிகம் வந்திருந்தார்கள் மைக்கு தான் எங்களுக்கு வேலை செய்யவில்லை அதனால் தான் பேச கொஞ்சம் சிரமப்பட்டேன். மத்தபடி எந்த பிரச்சனையும் அங்கு எனக்கு வரவில்லை என அஜித் ரசிகர்களை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார் திருச்சி காவல்துறை டிசி ஸ்ரீதேவி. மேலும் திருச்சி காவல்துறை சார்பாக ஒத்துழைத்த அனைத்து ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
வெட்டி சட்டையுடன் ஜம்முனு சென்னைக்கு வந்தார் பிரதமர் மோடி | வரவேற்பு கொடுத்தவர்கள் யார் யார் ?