ஆண்களை வழுக்கை என கூறினால் பெண்களின் அந்தரங்கப் பகுதியான மார்பகத்தை குறிப்பிடுவது போன்றதாகும், அதனால் இது ஒரு பாலியல் குற்றம் என 1995 ஆம் ஆண்டு தொழிலாளர் தீர்ப்பாயம் பிரிட்டனில் இதைக் கூறியது.
தற்போது தன்னுடன் வேலை செய்யும் தொழிலாளரை வழுக்கை என கூறி அவமதித்ததால் தொழிலாளர் தீர்ப்பாயதிடம் சென்று நீதி கேட்டு அதற்கு நிதியுதவி பெற்றுருக்கிறார் ஒருவர்.
பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு | புதிய கட்டண விவரங்கள் இதோ…

வடகிழக்கு இங்கிலாந்தில் யார்க்க்ஷயர் என்னும் பகுதியில் இருக்கும் நிறுவனத்தில் 24 ஆண்டுகளாக வழுக்கை தலை உடைய நபர் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவரை மேலதிகாரி ஒருநாள் வழுக்கை என திட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அவரை தாக்க முயற்சித்ததாக அதனால் இவரை வேலையை விட்டு அந்த நிறுவனம் தூக்கி இருக்கின்றது. இது தொடர்பாக தொழிலாளர் தீர்ப்பாயத்திற்கு சென்ற இந்த ஊழியர் என்னை வழுக்கை என்று சொன்னதால் நான் அவரை கண்டித்தேன் அதனால் என்னை வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள் என அவர்களிடம் மன்றாடினார்.

இதற்கு தொழிலாளர் தீர்ப்பாயம் ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்தது. 1995ஆம் ஆண்டில் இதே போல ஒரு வழக்கு வந்தது அதில் ஒரு நபரை வழுக்கை எனக் கூறினால் அது பெண்களின் மார்பகத்தை கொச்சை படுத்துவது போலாகும். அதனால் ஒரு ஆணை வழுக்கை என குறிப்பிட்டாலும் அது பாலியல் குற்றங்களுக்குல் அடங்கும் என தீர்ப்பளித்தது. அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியும் தீர்ப்பளித்தது.