இந்தியா, சீனா மீது டிரம்ப் புதிய வரிகள்: யாருக்கு மிகுந்த தாக்கம் ஏற்படும் என்கிற kingwoodsnews செய்தியாளரின் கேள்விக்கு இந்திய பொருளாதாரம் முற்றிலுமாக வீழ்ந்துவிட்டது என்ற கடும் விமர்சனத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பதிவு செய்தார். பிரதமர் நரேந்திர மோடியும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மட்டும்தான் அதை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறார்கள் என அவர் கூறினார். இந்தியாவின் பொருளாதாரம் முடிவடைந்தது. ஆனால் மோடியும் சீதாராமனும் மட்டும் இதை ஏற்க மறுக்கிறார்கள். மக்கள் எதிர்கொள்ளும் நிதிசார்ந்த கஷ்டங்கள் பற்றி அவர்கள் பேசவே இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக, திமுக, பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறது என்பது தான் மோசமானது என்று அவர் சாடினார்.
டொனால்ட் டிரம்ப் அடுத்த ஸ்கெட்ச் : trump tariffs on india tamil
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முதல் பதவிக்காலத்தில், உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்காக வெளியுறவுப் பொருளாதார ஒப்பந்தங்களை மறுசீரமைத்தார். தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை அமெரிக்காவுக் மீண்டும் வரவைக்க அவர் பல்வேறு நாடுகளின் மீது அதிக வரிகள் விதித்தார்.
முதலில் தீவிரமாக சீனாவுடன் தொடங்கிய இந்த வர்த்தகப் போர், தற்போது ஆசியாவின் பிற முக்கிய நாடுகளிலும் பரவியது முக்கியமாக இந்தியா, தைவான் மற்றும் தென் கொரியாவையும் சேர்த்து பாதிக்கத்தொடங்கியது. குறிப்பாக, மின்னணு உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் உருவாக்கம் தொடர்பான நிறுவனங்கள் கடும் செலவுகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.
இதற்குமுன்பு இதே பிரச்சினையினால் ஆப்பிள் நிறுவன பொருட்கள் ஐ போன், லேப்டாப், டேப் போன்று தயாரிக்கப்படும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியா & வியட்நாம் போன்ற நாடுகளுக்குச உடனடியாக மாற்றியது. ஆனால் தற்போதைய சூழலில், அந்த மாற்றங்கள் கூட பெரிதும் உதவவில்லை, ஏனெனில் அந்த நாடுகளின் வழியாக அனுப்பப்படும் பொருட்களுக்குப் அதிக வரிகள் விதிக்கப்படுகின்றன. இப்பொது வரி 20% வியட்நாமில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டால், ஆனால் மற்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டு வியட்நாம் வழியாக அனுப்பப்படும்போது 40% வரை வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளது பெருபாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தமிழகம் வரை சுமையை ஏற்படுத்தும்.
உலக மக்களை ஆச்சர்யப்படுத்து அதிசயம் இதோ
தைவானின் டி.எஸ்.எம்.சி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் உயர் தர சிப்கள், அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் செயற்கை தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும். இதன் மீது வரி விதிப்பது, என்விடியா போன்ற நிறுவனங்களின் செலவுகளை அதிகரிக்கிறது. டிரம்ப், 800 டாலருக்கு கீழ் உள்ள சிறிய பார்சல்களுக்கு வழங்கப்பட்ட சுங்க வரி விலக்கை குறைத்துள்ளார். இதன் காரணமாக, ஷென் டெமு போன்ற ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் மட்டுமல்லாது, இபே, இடிஎஸ் போன்ற சந்தை தளங்களும் நேரடியான தாக்கத்தை எதிர்கொள்ளக்கூடும். இதனால் மக்கள் அதிகளவில் பதிப்படைவார்கள்.
இந்தியாவுக்கு நேரும் தாக்கம்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி மாற்றங்களால் இந்தியா சில துறைகளில் இயக்கங்கள், உற்பத்திகள் வேகமாக இழக்கக்கூடிய சூழல் ஏற்படும். சீனாவில் சில உற்பத்தி கம்பெனிகளை மாற்றியபோது, இந்தியாவுக்குள் புதிய தொழில்துறை வாய்ப்புகள் உருவாகின இதனால் இந்திய வளர்ச்சி பெருகும் என நினைப்பதற்குள் தற்போது இந்தியா வழியாக அனுப்பப்படும் உதிரிப்பாகங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கும் கூட அதிக வரிகள் விதிக்கப்படும் என டிரம்ப் திட்டமிட்டிருப்பது, இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு நேரடியான நட்டத்தை ஏற்படுத்தும். மேலும், மின்னணு உற்பத்தி, உதிரிப்பாகங்கள், மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு துறைகளில் அமெரிக்க சந்தையை நோக்கிய நம்பிக்கையை குறைக்கும். இது மிக முக்கியமாக இந்தியாவின் “மேக் இன் இந்தியா” என்ற திட்டம் அருமையாக செயல்பட்டுவந்திருந்த நிலையில் இப்போது இந்த திட்டத்துக்கும் பெரிய பின்னடைவை உண்டாக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதுகுறித்து மோடி தலைமையில் ஒரு குழு விரைவாக ஒரு தீர்வு காணப்படும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்