TTF வாசன் மீது மூன்று பிரிவுகளில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். ஜிபி முத்துவை பின்னே அமர வைத்து வேகமாக வண்டி ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது சூலூர் காவல் நிலையத்திலும் மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

டிக் டாக் பிரபலாமான ஜிபி முத்துவை தனது சூப்பர் பாஸ்ட் பைக்கின் இருக்கையில் அமர வைத்து பயத்தை காட்டிய TTF வாசன் மீது போத்தனுர் போலீசார் வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் சூலூர் போலீசாரும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையை சேர்ந்த TTF வாசன் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இருக்கின்றனர். அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலானியி தான் கோவை பாலக்காடு அருகில் ஜிபி முத்துவை வைத்து பைக் சாகசம் செய்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் கோவை போலீசார் அவர் மீது காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
