கைதாகும் TTF வாசன் ? | பைக்கில் 243 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக புகார் | இவர் 2k கிட்ஸ் களின் கனவு நாயகன் ஆவார்

சூப்பர் பைக்கில் 243 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த youtuber டிடிஎஃப் க்கு லைசன்ஸ் கேன்சல் செய்யப்படுமா இவரை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதள ஆர்வலர்கள் கேட்டு வருகின்றனர்.

டிடிஎஃப் என்பவர் கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு பைக் ரைடர் ஆவர் தனது youtube பக்கத்தில் 2.73 மில்லியன் சப்ஸ்கிரைபர்சை கொண்டு வருகிறார்.

இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். 2k கிட்ஸ் மத்தியில் இவர் மிகவும் பிரபலமாவார். அது மட்டுமல்லாமல் இவரின் பிறந்தநாளுக்கு சென்ற வருடம் அம்பத்தூரில் ரசிகர்களுடன் மீட்டப் வைத்திருந்தார். அப்போது கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்ததால் அம்பத்தூரிலேயே இவரை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு மிகவும் ஃபேமஸான இவர் லடாக் மற்றும் நேபால் பைக் டூர் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பின்பு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவரது பிறந்த நாளுக்காக கோயம்புத்தூரில் ஒரு சப்ஸ்கிரைபர்ஸ் மீட் அப் வைத்திருந்தார்.

பாக்கெட் மனி மட்டும் ஒரு நாளைக்கு 40 லட்சம் | உண்மையான டாடி’ஸ் லிட்டில் பிரின்சஸ் பற்றி கேள்விபட்டுறீர்களா ?

அப்போது ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே அங்கு கூடியிருந்தது. அங்கு ஒரு மைதானத்தில் வைத்து தனது பிறந்த நாளை கொண்டாடிய டிடிஎஃப் க்கு ரசிகர்கள் பலரும் குறிப்பாக 2 கே கிட்ஸ் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அந்த இடமே கொஞ்சம் ஸ்தம்பித்து போனது. அதன்பிறகு யார் இவர் இவருக்கு இப்படி கூட்டம் வருகிறது என பலரும் ஆச்சரியப்பட்டு சமூக வலைதளங்களில் இவரை தேடி இருக்கின்றனர். அப்போதுதான் தெரியவந்தது இவர் இதற்கு முன்பு 243 கிலோமீட்டரில் ஸ்பீடாக பைக் ஓட்டியிருக்கிறார் என்று. நம்முடைய இந்திய நெடுஞ்சாலைகளில் அவ்வளவு வேகமாக செல்வது என்பது பாராட்டத்தக்க விஷயம் அல்ல.

அதனால் இவர் எப்படி இவ்வளவு கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறார். இவரின் லைசென்ஸை கேன்சல் செய்து இவரை கைது செய்யுங்கள் என சமூக வலைதளத்தில் பலரும் கூறி வருகின்றனர். மேலும் இந்த விஷயத்தினால் இவருக்கு கைது நடவடிக்கை எடுக்கப்படுமா ? இவரின் லைசென்ஸ் கேன்சல் செய்யப்படுமா என கேள்விகள் எழும்பி இருக்கிறது. மேலும் இது போன்ற பைக் ரைடர்ஸ்கள் இளம் சமுதாயத்திற்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருப்பார்கள் எனவும் பலர் கூறி வருகின்றனர். அதனால் தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு இதையெல்லாம் தடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Spread the love

Related Posts

Viral Video | அடுக்கு தமிழில் வசனம் பேசி தான் அமெரிக்காவில் நலமுடன் உள்ளதை பதிவு செய்த நடிகர் டி ராஜேந்தர்

நடிகர்கள் நெப்போலியன் மற்றும் பாண்டியராஜ் ஆகியோர்கள் டி ராஜேந்திரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது

சென்னையில் ரோஸ் மில்க் குடித்ததால் சிறுவன் உயிரிழப்பு | உண்மை காரணம் என்ன என போலீசார் விசாரணை

சென்னையில் சிறுவன் ஒருவனுக்கு ரோஸ்மில்க் குடித்ததால் மயக்கம் ஏற்பட்டு இறந்து போன சம்பவம் தற்போது அதிர்ச்சியை

கடைசியாக ஒருமுறை கணவருக்கு முத்தம் கொடுத்து கனத்த இதயத்துடன் அழுத படியே உடலை தகனம் செய்ய புறப்பட்ட மீனா

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரை உடலை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பெசன்ட் நகர்