“டிடிஎஃப் ஓட பவர் தெரியாம நியூஸ் சேனல் விளையாண்டுட்டு இருக்கீங்க” என்று நியூஸ் சேனல்களுக்கு வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார் டி டி எஃப் வாசன்.
பைக்கில் வேகமாக சென்றதால் வழக்கு பதியப்பட்டு இருக்கும் டிடிஎஃப் வாசன் வீடியோ ஒன்று மூலம் நியூஸ் சேனலுக்கு அவரைப் பற்றி நியூஸ் போடும் எல்லோருக்கும் எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் பேசிய அவர்
“பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் இல்லாதது நல்லது தான்”- மணிரத்னம்

டி டி எஃப் ஓட பவர் தெரியாம விளையாண்டிட்டு இருக்கீங்க நியூஸ் சேனல்ஸ் அப்படின்னு கேட்கணும்னு தோணுது ஆனா கேட்க மாட்டேன். ஏன்னா நானும் சுமுகமா போலாம்னு தான் நினைச்சுட்டு இருக்கேன். அதனால நியூஸ் சேனல் உங்களை பார்த்து எனக்கு பயம் கிடையாது. எனக்கு யாரை பார்த்து பயம் கிடையாது. உங்களுக்குன்னு ஒரு எல்லை இருக்கு நீங்க அந்த எல்லையை மீறி போறீங்க அப்படி பண்ணீங்கன்னா எல்லா யூட்யூபர்ஸ் ஒன்னா சேர்ந்து உங்களுடைய தப்பான விஷயங்களை வெளியே சொல்லிடுவோம்.

அதனால உங்களுடைய லிமிட் என்னவோ அப்படியே இருங்க என்னை பத்தி போலியான செய்திகளை பரப்பாதீங்க. டிடிஎஃப் வாசன் மெரட்டரான்னு நினைப்பீங்க ஆனா நான் மிரட்டல யூட்யூபர்ஸ் எல்லாருக்கும் நான் ஒரு விஷயத்தை சொல்லிக்கிறேன். எத்தனையோ யூடியூபர்களை இவங்க செஞ்சுட்டாங்க. என்னையும் செஞ்சுட்டாங்க, மதன் அண்ணனையும் செஞ்சுட்டாங்க, இர்பான்னையும் செஞ்சுட்டாங்க. அடுத்து நீங்களா கூட இருக்கலாம். அதனால உஷாரா இருந்துக்கோங்க. எதுக்காக அப்படி பண்றாங்கன்னா நம்ம கஷ்டப்பட்டு எவ்வளவு ஹார்ட்ஒர்க் பண்ணி இந்த இடத்தில் இருக்கோம் என்று அவங்களுக்கு தெரியாது. ஆனா இவன் இருக்க இடத்துல இவனுக்கு ஏதாவது ஒரு பிராப்ளம் வந்துச்சுன்னா அதை எடுத்து நம்ம நியூஸ் சேனல்ல போட்டு வியூஸ் ஏத்திக்கணும் அப்படின்னு நினைக்கிறாங்க. இதெல்லாம் வந்து ரொம்ப கேவலமான விஷயம்” என்று எப்படியாக அந்த வீடியோவில் பேசிய அவர் முடித்துள்ளார்.
'TTF வோட பவர் தெரியாம நியூஸ் சேனல்ஸ் விளையாண்டுட்டு இருக்கீங்க'
— DON Updates (@DonUpdates_in) September 28, 2022
'எனக்கு யாரை பாத்தும் பயம் கிடையாது'
'ஓரளவுக்கு லிமிட்லயே இருந்துக்கோங்க'
– ஊடகங்களுக்கு TTF வாசன் வீடியோ மூலம் எச்சரிக்கை pic.twitter.com/vzWniVQtPf