150 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பைக் ஓட்டி போக்குவரத்து விதிகளை மீறிய வழக்கில் யூடியூபர் TTF வாசனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பின்னால் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவாளர் ஒருவர் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம் திருவரும்பூரை சேர்ந்தவர் சிகே அருண். உதயநிதி ரசிகர் மன்ற மாவட்ட துணைத் தலைவராக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயோ வைத்துள்ளார். சி கே அருண் மீடியாஸ் என்கின்ற யூடியூப் சேனலில் நடத்தி வருகிறார். தான் கோயிலுக்கு செல்லும் வீடியோ, சாலைகளில் நடந்து செல்லும் வீடியோக்கள் எல்லாம் சினிமா டயலாக் வைத்து சித்தரித்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் தினமும் ஏராளமானோர் சந்திப்பதும் பொன்னாடை போர்த்துவது போலவும் புகைப்படங்களை எடுத்து பதிவேற்றி வருகிறார்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் உடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வைத்துக் கொண்டு தன்னைக் ஒரு VIP ஆக காட்டிக் கொள்கிறார். இவையெல்லாம் அவரது தனிப்பட்ட விருப்பம் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக பைக் ஓட்டிய வழக்கில் சிக்கியுள்ள பைக் ரேஸர் டிபிஎஃப் வாசன் அதை வீடியோவாக தயாரித்து வெளியிட்டு உள்ளார் இந்த வீடியோவில் சி கே அருணும் இருக்கிறார்.
TTF வாசனுக்கு ஜாமின் வாங்க நீதிமன்றம் சென்ற போது அவருடன் இருக்கும் சிகே அருண் அவர்கள் அன்பில் மகேஷுடன் ஆதரவாளரான தன்னால் தான் TTF வாசனுக்கு ஜாமீன் கிடைத்தது என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பதாக வாசனின் ரசிகர்கள் கூறுகிறார்கள். உதய்நிதி ரசிகர் மன்றத் துணைத் தலைவராகவும் அன்பில் மகேஷின் தீவிர ஆதரவாளராகவும் தன்னை காட்டிக்கொள்ளும் சி கே அருண் வன்முறையில் நாங்கள் தேடிப் போவது இல்லை வன்முறை எங்களை தேடி வந்தால் விடுவதும் இல்லை என கேஜிஎப் டயலாக் வெளியீட்டு எப்படி வேண்டுமானாலும் வண்டி ஓட்டுங்கள். சாலை விதிகளை மதிக்க வேண்டியது இல்லை. காவல்துறை வழக்குப் போட்டால் இப்படி கேஜிஎப் டயலாக் போட்டு என்றும் ஜாமீன் எடுத்துக் கொள்ளலாம் என இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் விதமாகவும் சட்டத்தை துச்சமென நினைப்பது போலவும் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. தங்களது பெயர்களைப் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை உதயநிதி ஸ்டாலினும் அவரது நண்பர் அமைச்சர் அன்பில் மகேஷும் தான் கண்காணிக்க வேண்டும்.
