ஒரு பிள்ளைக்கு இரண்டு தாய் ? | 100 ஆண்டுகளுக்கு மேல் தீர்ப்பு கிடைக்காத புரியாத புதிர் கொண்ட வழக்கு | இதன் பின்னணி என்ன ??

இந்த உலகில் பல விசித்திரமான மர்மங்களும் விடை தெரியாத சில விடயங்களும் இன்றளவும் உலவிக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி இன்றளவும் விடை தெரியாத 100 ஆண்டுகள் பழமையான மற்றும் சுவாரஸ்யமான ஒரு வழக்கைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம். இந்தப் பதிவை முழுமையாக நீங்கள் படித்தால் கண்டிப்பாக ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம் பார்த்தது போல சுவாரசியமான அனுபவம் கிடைக்கும். சரி வாருங்கள் இந்த உண்மை வழக்கை பற்றி காண்போம்.

Bobby Dunber

இந்த உண்மை கதை 1912 இல் நடக்கிறது அமெரிக்காவில் லூசியானா பகுதியில் வாழும் குடும்பம் தான் இந்த டன்பர் குடும்பம். இந்த குடும்பத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இது மிகவும் செல்வம் படைத்த மிகப் பெரிய பணக்கார குடும்பம். இந்தக் குடும்பத்தின் தம்பதிக்கு பிறக்கும் குழந்தைகள் தான் பாபி மற்றும் அலேன்சோ. இதில் முதல் குழந்தை பாபியை சுற்றிதான் இந்த முழுக்கதையும் இருக்கும்.

பாபிக்கு ஒரு 4 வயது இருக்கும்போது டன்பர் குடும்பத்தினர் பிக்னிக் செல்ல வேண்டுமென்று ஒரு ஆற்றுக்கு செல்கின்றனர். அப்போது 4 வயது மட்டுமே ஆன அந்த பாபி அந்த ஆற்றுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சேற்று மணலில் விளையாடலாம் என்று செல்கிறான். ஆனால் சிறிது நேரத்திலேயே விளையாட சென்ற அந்த சிறுவன் பாபி காணாமல் போகிறான். காணாமல் போன சிறுவன் பாபியை தேடி பெற்றோர்கள் அங்குமிங்கும் தேடி அலைகின்றனர். ஆனால் அந்த சிறுவன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கடைசியில் போலீசில் மிசிங் கம்ப்ளைன்ட் கொடுக்கின்றனர். அதன் பெயரில் விசாரணையைத் தொடங்கி ஆறு முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடியும் அந்த சிறுவன் கிடைக்கவில்லை. பிறகு அந்த சிறுவனின் பெற்றோர்கள் நியூஸ் பேப்பரில் தனது மகனை கண்டுபிடித்து தருபவருக்கு ஆயிரம் டாலர்கள் பரிசு அறிவிக்கின்றனர்.

Bobby Dunber With His Mother

ஆனால் நான்கு மாதங்கள் மேல் ஆகியும் எந்த தகவலும் கிடைக்கப் பெறாத நிலையில் அந்த ஆயிரம் டாலரை 6 ஆயிரம் டாலராக உயர்த்தி மீண்டும் நியூஸ் பேப்பரில் விளம்பரம் செய்கிறார் பாபியின் அப்பா. ஆனால் அப்போதும் எந்த தகவலும் இல்லை, அதற்குப் பிறகு சில மாதங்கள் உருண்டோடின. அப்போது அமெரிக்காவின் மிசிசிப்பி என்னும் இடத்தில் பாபி போன்று உருவ அமைப்பு உள்ள ஒரு சிறுவனை வில்லியம் வால்டர் என்று ஒருவனுடன் நாங்கள் பார்த்தோம் என்று அங்கு உள்ள சிலர் லூசியானா போலீசுக்கு தகவல் அளித்தனர். இதன் பெயரில் மிசிசிபிக்கு சென்று அந்த வில்லியம் வால்டரை போலீசார் விசாரணை செய்தனர். உன்னுடன் இருக்கும் அந்த சிறுவன் யார் என்று வினவினர். அதற்கு அந்த வால்டர், என்னுடைய வீட்டில் வேலை செய்யும் ஜூலியா அண்டர்சன் உடைய மகன்தான் இந்த ப்ருஸ் ஆண்டர்சன், இவன் பெயர் அதுதான் நீங்கள் சொல்லும் பாபி இவன் கிடையாது என்று அந்த வில்லியம் வால்டர் போலீசிடம் கூறினார். இதையெல்லாம் நீ போலீஸ் ஸ்டேஷனில் வந்து சொல்லு இப்போதைக்கு உன்னை நான் கைது செய்கிறேன் என்று உடனடியாக கைது செய்தனர். அந்த சிறுவனையும் கூடவே அழைத்து சென்றனர்.

அதற்குப் பிறகு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அந்த வேலைக்கார பெண்மணி ஜூலியா ஆண்டர்சன் மற்றும் பாபியின் பெற்றோர்கள் ஆனா டன்பர் தம்பதியினர் என இரு தரப்பினரையும் அழைத்து அந்த சிறுவர்களை போலீசார் அடையாளம் காட்ட சொன்னார்கள். ஆனால் இரண்டு அம்மாக்களும் என் மகன் எது என்பதை நிரூபனாமாக சொல்ல கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டனர். பிறகு சிறிது நேரம் கழித்து ப்ருஸ் ஆண்டர்சன் என்னுடைய மகன் என்று ஜூலியா ஆண்டர்சன் போலீசாரிடம் தெரிவித்தார். அதற்கு போலீசார் இந்த சிறுவனின் அப்பா யார் என்று கேட்டதற்கு, இது விபத்தின் காரணமாக உருவான ஒரு கரு சேல்ஸ்மேன் உடன் 5 டாலர்களுக்கும் படுக்கையை விரித்தேன், அதனால் உருவான கரு தான் இந்த ப்ருஸ் அதனால் இப்போது அந்த சேல்ஸ்மேன் எங்கு இருக்கிறார் என்று எனக்கு தெரியாது என்றார் ஜூலியா ஆண்டர்சன்.

அந்த வேலைக்கார பெண் ஜூலியா இது என்னுடைய மகன் தான் என்று போலீசாரிடம் கூறி கொண்டிருக்கும் போதே அந்த சிறுவன் பாபியின் அம்மாவை கட்டித்தழுவி முத்தங்களை பரிமாறினான். இப்போது போலிஸாருக்கு குழப்பம் ஏற்பட்டது. இந்த வேலைக்கார பெண்மணி ஜூலியா இது என்னுடைய மகன் என்கிறாள். ஆனால் அந்த சிறுவன் காணாமல் போன சிறுவன் பாபியின் அம்மாவை கட்டித் தழுவுகிறான். இதில் ஏதோ ஒரு குழப்பம் உள்ளது அதனால் உன்னை நம்ப முடியாது. இந்த குழந்தை டன்பர் குடும்பத்தை தான் போய் சேரும் என்று அவர்களிடமே இதுதான் உங்கள் குழந்தை பாபி நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள் என்று கொடுத்து விட்டனர்.

இந்த வழக்கு பின்னர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வில்லியம் வால்டர் சார்பாக வாதாடிய வக்கீளுக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. அந்த கடிதத்தை எழுதியது ஒரு பெண் அந்தப் பெண்மணி அதில் எழுதியது என்னவென்றால், அந்த சிறுவன் உண்மையிலேயே ப்ருஸ் ஆண்டர்சன் தான் அவன் டன்பர் குடும்பத்தை சேர்ந்த பாபி கிடையாது என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். இது ஒருபுறமிருக்க அந்த சிறுவன் பாபி அந்த குடும்பத்தில் மிக பெரிய செல்வந்தனாக வளர்கிறான். மறுபுறம் ஜூலியா ஆண்டர்சன் இன்னொரு வாலிபரை திருமணம் செய்து அவர்களுக்கு 8 குழந்தை என ஜூலியா குடும்பமும் செல்வந்தர்களாக வாழ்ந்தனர். பிறகு காலங்கள் உருண்டோடின. அந்த பாபிக்கு ஒரு குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு இன்னொரு குழந்தை என பாபிக்கு பேரன் பேத்தி எடுக்கும் அளவிற்கு வயதாகிவிட்டது. வயது முதிர்ச்சியின் காரணமாக 1966 இல் பாபி இயற்க்கை எய்தினார்.

இப்போது 2004 ஆம் ஆண்டு. பாபியின் பேத்தியான மார்க்ரெட் தன்னுடைய தாத்தா பாபி உண்மையில் டன்பர் குடும்பத்தை சேர்ந்தவர்தானா ?? இல்லை ப்ருஸ் ஆண்டர்சனா ?? என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது இந்த மார்க்ரெட், ஜூலியாவின் பேத்தியிடம் கைகோர்த்து இதன் பின்னணி என்ன என்பதை கண்டறிய முன் வந்தார். அப்போது அவர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய ஆதாரம் தான் 1913இல் வில்லியம் வால்டரின் வக்கீலுக்கு வந்த அந்த கடிதம் அந்தக் கடிதத்தை பார்த்த பிறகு இவர்களுக்கு ஒரு சந்தேகம் எழுகிறது நாம் ஏன் இதை டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்க கூடாது என்று.

Bruce Anderson & Bobby Dunber

2004ஆம் ஆண்டில் டிஎன்ஏ டெஸ்ட் அப்போதுதான் உலக அளவில் தொடங்கப்பட்டது அப்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்க இந்த மார்க்ரெட் உடைய அப்பாவின் (அதாவது பாபியின் மகன்) டிஎன்ஏ சாம்பலையும். அலோன்சோவின் (அதாவது பாபியின் சகோதரன்) மகன் டிஎன்ஏ உடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர். ஆனால் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டு டிஎன்ஏ-வும் ஒத்துப்போகவில்லை என டெஸ்டில் தெரிகிறது. அப்போதுதான் மார்க்ரெட்க்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. இதுவரை நாம் டன்பர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் நாம் உண்மையில் டன்பர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அந்த பாபி என்னும் நபர் உண்மையிலேயே ப்ரூஸ் ஆண்டர்சன் தான் என பேத்திக்கு தெரியவருகிறது.

ஆனால் அந்த புரூஸ் ஆண்டர்சன் பாபியின் அம்மாவைப் பார்த்தவுடன் எதற்காக கட்டித் தழுவ வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கு காரணம் இதுதான் என சிலர் சொல்கின்றனர் அது என்னவென்றால், அந்த சிறுவன் ப்ரூஸ் ஆண்டர்சன் சிறுவயதிலிருந்தே வில்லியம் வால்டரிடம் தான் வளர்கிறான். அந்த வில்லியம் வால்டர் என்கிற நபர் ஒரு காட்டுமிராண்டி இவனிடம் நாம் வளர்ந்தால் இவன் நம்மை அடித்தே கொன்று விடுவான் நமக்கு ஒரு சுதந்திரம் தேவை அதனால் நாம் இந்த டன்பர் குடும்பத்துடன் போய் சேர்ந்து விடலாம் என்று எண்ணி தனக்கு ஒரு பணக்கார வாழ்க்கை வேண்டும் என்பதற்காக மட்டும் தான் அவன் அந்த குடும்பத்தில் நான்தான் பாபி என்று பொய் சொல்லி உள்ளே சேர்ந்துள்ளார். இப்படியான விஷயங்களை தான் ஒரு தியரி ஆக இன்று வரை சொல்லப்பட்டும் நம்பபட்டும் வருகிறது.

இறுதியாக இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு கொண்டுவந்தபோது இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் இது நடந்து நூறு ஆண்டுகள் மேல் ஆகிறது. அந்த சிறுவன் 100 ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் இருக்கவே முடியாது என அறிந்து, அதனால் எப்போதோ முடிந்துவிட்ட கதையை இப்போது தொடங்க வேண்டாம். அதனால் இந்த கேசை மூடுவது தான் சரியான விஷயமாக எனக்கு படுகிறது என்று நீதிபதிகள் இந்த கேசை முழுவதுமாக அடைத்து விட்டனர். சிறுவயதில் இருந்தே அன்பு, அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த அந்த புரூஸ் ஆண்டர்சன் நாம் செல்வந்தனாகவும் அன்பு, அரவைணைப்போடு வாழ வேண்டுமென்று ஒரே நோக்கத்துடன் ஒரு பொய்யான வாழ்க்கையை டன்பர் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் என்பதை அறிந்து பலரும் வியந்தனர்.

Spread the love

Related Posts

Viral Video | “20 ரூபா குடுத்து தேசிய கொடி வாங்குனாதான் உனக்கு ரேஷன் பொருள் தருவோம்….” ஹரியானாவில் அதிர்ச்சி, பொதுமக்கள் குற்றசாட்டு

20 ரூபாய் கொடுத்து தேசியக் கொடியை வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என கூறியதால்

“எல்லா ஓட்டும் அன்பு தம்பி அண்ணாமலைக்கே வரட்டும், எனக்கு ஒரு ஓட்டு கூட வேண்டாம்” – பரபரப்பாக பேசிய சீமான்

அன்பு தம்பி அண்ணாமலை அவர்கள் அஞ்சலகத்துறை பணியாளர்களின் கோரிக்கைகளை தீர்க்க குரல் கொடுத்தால் என்னுடைய ஆதரவாளர்களின்

வெற்றிகரமாக 3-ஆவது மனைவியுடன் சேர்ந்து தனது 9-ஆவது குழந்தையை பெற்றெடுத்த டெஸ்லா உரிமையாளர் எலன் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலன் மஸ்க்க்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. எலன் மஸ்க் அவர்கள்

x