நேற்று உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் விழாவில் கலந்துகொண்ட கமலஹாசன் தனது தயாரிப்பில் அடுத்த வரவுள்ள படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவலை அறிவித்து உற்சாகப்படுத்தியுள்ளார். தற்போது இந்த பதிவினை உதயநிதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் உருவாகி நேற்றோடு 15 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அதற்கான ஒரு விழாவை நேற்று தொடர்ந்தார் உதயநிதி ஸ்டாலின். அந்த விழாவிற்கு இதுவரை உதயநிதியின் பேனரில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பின் பெயரில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமீர்கானும் உலகநாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொண்டனர்.

அந்த மேடையில் தனது ப்ரொடக்ஷனில் அடுத்த படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிப்பார் என்று கூறி உதயநிதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கமல். தற்போது அந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் உதயநிதி மேலும் அவர் கூறியதாவது :- “15 வருட ரெட் ஜெயன்ட் மூவிஸ் -ன் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். அப்போது கமல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல் சாருக்கு நன்றி” என கூறியிருந்தார்.
மேலழகு பொங்கி எழ…. கவர்ச்சி போட்டோவை பதிவிட்டிருக்கும் நடிகை மாளவிகா | மேலும் புகைப்படங்கள் உள்ளே

இதற்கு முன்பு ரெட் ஜெயன்ட்க்காக தான் கமலஹாசன் இந்தியன் 2 படம் பண்ணுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.