உம்ரான் மாலிக்கை பார்க்க வக்கார் யூனிஸ் போல உள்ளது என பிரட் லீ கூறியதற்கு தற்போது பதிலளித்திருக்கிறார் உம்ரான் மாலிக்
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஒரு ஆட்டம் தவறாமல் எல்லா இடத்திலும் 150 கிலோமீட்டர் ஸ்பீடுக்கு மேல் பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் உம்ரான் மாலிக். எல்லா ஆட்டம் முடியும்போதும் அதிவேக பந்து வீசிய விருதை இவர்தான் தட்டிச் சென்றார். அந்த அளவிற்கு வேகத்தில் சுறுசுறுப்பு காட்டும் உம்ரான் மாலிக்கை பார்த்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் பிரெட் லீ அவர்கள் :- இவரைப் பார்க்கும்போது வக்கார் யூனிஸ் ஞாபகம் தான் எனக்கு வருகிறது. உம்ரான் மாலிக்கை போலவே உள்ளது. அதனால் இவருக்கு நான் பெரிய ரசிகனாக இருக்கிறேன். எதிர்காலத்தில் இவர் நன்கு பயிற்சி பெற்று நன்றாக வருவார்” என பாராட்டி இருந்தார்.

தற்போது தென் ஆப்பிரிக்காவுடன் ஆடும் டி20 போட்டிகளில் தேர்வாகி இருக்கும் உம்ரான் மாலிக்கிடம் பிரெட் லீ கூறியதைப் பற்றி கேட்டபொழுது அவர் கூறியது என்னவென்றால் :- “நான் வக்கார் யூனிஸ் பார்த்து எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. நான் அவரை பின்பற்றவும் இல்லை. எனக்கு இயற்கையாகவே இந்த பௌலிங் ஆக்சன் வந்தது. நான் எப்போதுமே பின்பற்றுவது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆன பும்ரா, ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் தான் என பளிச்சென்று பதில் அளித்துள்ளார்.
