அம்மா உணவகத்தில் கிடைக்கும் பூரி, வடை, ஆம்ப்லேட் | திமுக கவுன்சிலர் உணவகமாக மாறிய கொடுமை

நகரமெங்கும் ஏழை எளியோரின் பசியை தீர்க்க ஆங்காங்கே அம்மா உணவகங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா அவர்கள் அவரின் செல்லப் பெயரில் அம்மா உணவகம் என தொடங்கி வைத்து திட்டம்தான் இது. இந்த திட்டம் தற்போது தமிழகமெங்கும். இன்று வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜெயலலிதா தொடங்கி வைத்த நல்ல திட்டங்களில் இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

ஆனால் மதுரையில் உள்ள ஒரு அம்மா உணவகத்தில் தனியார் உணவகம் போல மாற்றிக் பூரி, வடை ஆம்ப்லேட் உள்ளிட்டவை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். அம்மா உணவகம் செயல் படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் முதலமைச்சர் அவர்கள் அம்மா உணவகம் அந்த பெயரிலேயே தொடர்ந்து செயல்படும் என அறிவித்து எல்லோரையும் குதூகலபடுத்தினார்.

குழந்தை பிறந்த உற்சாகத்தில் வந்த கணவனை மடக்கி பிடித்த போலீஸ் | விசாரித்ததில் மனைவிக்கு வயது வெறும் 17 தான் என தெரியவந்துள்ளது

தற்போது அம்மா உணவகங்கள் முன்புபோல முறையாக செயல்படவில்லை என பல இடங்களில் பல புகார்கள் எழுந்து வந்தது இந்த நிலையில் மதுரையில் ஒரு அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய இட்லி, 5 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லெட் என தனியார் உணவகத்தில் கிடைப்பது போல கொடுத்து வருகின்றனர். பல்வேறு வகையான உணவுகளையும் மத்திய வேலைகளிலும் வழங்கி வருகின்றனர்.

அம்மா உணவகத்திற்கு வழங்கப்பட்ட மாவு, சிலிண்டர் மற்றும் ஊழியர்களை தனக்கு பிடித்தவாறு உணவுகளை விற்பனை செய்ய வைத்து அதில் லாபம் பெறுகிறார் என்று புகார் எழுந்துள்ளது. நாள்தோறும் 500 முதல் 1000 ரூபாய் வரை அம்மா உணவக ஊழியர்களிடம் பெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஏழைகளின் பசியை போக்க செயல்படுத்தப்பட்ட அம்மா உணவகத்தை திமுக கவுன்சிலர் தங்களுக்கு ஏற்றவாறு பல உணவுகளை அதில் சேர்த்து லாபமீட்டும் உணவகமாக மாறி உள்ளது. அனைவரும் இதைக் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox