வழிப்போக்கர் ஒருவருக்கு 2 மணி நேரம் காத்திருந்து தாமாகவே பைக்கை சரி செய்து அனுப்பி வைத்த அஜித் | யாருக்கும் தெரியாத கதையா கூறிய ரசிகர்

வழிப்போக்கர் ஒருவருக்கு பைக்கை சரி செய்து அனுப்பி வைத்த அஜித்தின் எளிமையை கண்டு ஒருவர் அஜித்தை பற்றி சமூக வலைதளத்தில் புகழ்ந்து பேசி உள்ளார்.

அந்த இளைஞர் கூறிய போது :- “நான் உங்களுடன் ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு சம்பவமும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் நடக்கும், நான் முதல்முறையாக பைக் ட்ரிப் செய்யும்போது டயர் பஞ்சர் ஆகி வழியிலேயே நின்று விட்டேன். நான் அப்போது உதவிக்கு யாரேனும் வருவார்களா என காத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மிகவும் பிடித்த வண்டியான பிஎம்டபிள்யூ பைக் வைத்திருந்தவர் என்னை கடந்து சென்றார்.

Viral Video | ஊர் கட்டுப்பாடு என்கிற பெயரில் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்த கடைக்காரர்

அப்போது நான் அவருக்கு கையசைத்து எனக்கு காற்று அடிக்க வேண்டும் என கூறினேன். அப்போது அவர் பின்னால் வரும் ஒரு வண்டியில் அது இருக்கிறது என கூறினார். அந்த கார் 10 நிமிடத்திற்குள் வந்து சேரும் என கூறியதால் நான் அவரிடம் கொஞ்ச நேரம் பேச்சு வார்த்தை நடத்தினேன், அப்போது அவர் உங்களுடைய பெயர் என்ன, நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என என்னிடம் கேட்டார். அதன் பிறகு என்னுடைய பெயர் அஜித் உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி என அவரையும் அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு அந்த சூப்பர் ஸ்டாரே இறங்கி வந்து எனக்கு உதவி செய்து என்னுடைய டயரை பழுது பார்த்தார்.

அதன் பிறகு இரண்டு மணி நேரத்திலேயே நாங்கள் எங்களுடைய பயணத்தை தொடர்ந்தோம். இவ்வளவு உதவிகளை செய்தாரே நாம் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக என்னுடன் வந்து டீ சாப்பிடுகிறீர்களா என அழைத்தேன். அதன் பிறகு ஒரு டீ கடையில் வண்டியை நிறுத்தி என்னுடன் டீ சாப்பிட வந்தார். அப்போது அவரிடம் இதற்கு முன்னால் அவர் எங்கெங்கெல்லாம் சென்று இருக்கிறார் என்று அவருடைய பயணத்தைப் பற்றி ஒரு பத்து நிமிடம் கேட்டு அறிந்தேன். பின்னர் அவர் எங்களுடைய ரூட் மேப் அறிந்து எங்களுக்கு வாழ்த்து கூறினார்.

நான் இந்த விஷயங்களை பதிவிட இரண்டு காரணங்கள் உள்ளது

1.) அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்கும் அவர் தன்னுடைய ரசிகர்களிடமும் சக மனிதர்களிடமும் துளி கூட அந்த பிரபலம் என்கிற திமிரை காட்டாமல் பணிவாக நடந்து கொண்டார்.

2.) மேலும் என்னுடைய வாழ்நாளில் இது எனக்கு மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்துள்ளது. நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இந்த சம்பவம் என் வாழ்க்கையின் கோணத்தையே மாற்றி உள்ளது.

என இப்படியாக அந்த பயனர் தம்முடைய இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Spread the love

Related Posts

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். தமிழகத்தில்

“நான் பாவனி கண்ட்ரோல்க்கு வந்துட்டேன்” | மேடையில் ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த அமீர்

பவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி போன்ற சீரியலில் நடித்து