தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள பாஞ்சான்குளம் கிராமத்தில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் கூட்டம் நடத்தி அங்குள்ள ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த மாணவர்களை ஊருக்குள் இருக்கும் கடைக்கு வந்து தின்பண்டம் வாங்க கூடாது என ஒதுக்கி வைத்துள்ளனர்.
நேற்று பள்ளிக்கு கிளம்பிய குழந்தைகள் அங்குள்ள பெட்டி கடை ஒன்றில் தின்பண்டம் வாங்க வந்த போது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அதற்கு அந்த குழந்தைகள் எதற்காக எங்களுக்கு தரமாட்டீங்க ? என்ன கட்டுப்பாடு என கேட்டுள்ளனர் ? அதற்கு அந்த கடைக்காரர் இதெல்லாம் ஒரு கட்டுப்பாடு உங்க தெரு பசங்களுக்கு கொடுக்கக் கூடாதுன்னு நாங்க முடிவெடுத்து இருக்கோம். அதனால இனிமே இந்த கடைக்கு வந்து தின்பண்டம் வாங்காதீங்க என அவர் கூறுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று இரவில் இருந்து வைரலாக பரவி வருகிறது. தற்போது தென்காசியில் அமைந்துள்ள இந்த பாஞ்சான்குளம் கிராமத்தில் அந்த குறிப்பிட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டு அந்த கடையின் உரிமையாளர் ராமமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீண்டாமை என்பது மிகப்பெரிய கொடுமை அதை யாரும் யாருக்கும் செய்ய கூடாது.
தென்காசி, சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு
— DON Updates (@DonUpdates_in) September 16, 2022
ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக்கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது pic.twitter.com/xOTF9NVEcn