கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலினிடம், ஆயிரம் ரூபாய் குடும்ப பெண்களுக்கு எல்லா மாதமும் கொடுப்பேன் என்று சொன்னீர்களே எப்போது கொடுப்பீர்கள்? என்று கேட்டதற்கு இன்னும் நாலு வருஷம் இருக்கிறது அதற்குள் நாங்கள் கொடுத்து விடுவோம் என்று உதயநிதி சொல்லபோக அங்கிருந்த பெண் ஒருவர் ஆட்சி முடியும் போது கொடுக்கப் போகிறார்களா ? இதை நம்பவேண்டுமா ? என்று மேலும் மேலும் கேள்வி எழுப்பினர்.
இது உதயநிதிக்கு புதிதல்ல அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் இந்த பிரச்சனை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட ஆட்சிக்கு வந்த முதல்கணமே முதல் கையெழுத்து நீட்டை ஒழிப்பதுதான் என்றார். கரூர் பிரச்சாரத்தின்போது கூட நீட்டுக்கு எதிராக தொடர்ந்து போராடுவது தான் அந்த ரகசியம் என்று சொல்ல, இது மக்களை கொந்தளிக்க செய்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லுகுளம் பகுதியில், மாநகராட்சியில் போட்டியிடும் 25 வேட்பாளர்களுககாக, பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது உதயநிதி ஸ்டாலினிடம் தங்கம்மாள் என்கிற பெண் தனக்கு நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று குறை கூறி. எப்போது தள்ளுபடி செய்வீர்கள் என்று கேட்டு அதை மனுவாக எழுதி கொடுக்கும்படி உதயநிதியிடம் மீண்டும் மீண்டும் அந்த பெண் கேள்வி எழுப்பினர்.
உடனே உதயநிதி அவர்கள் பதில் ஏதும் சொல்ல முன்வராத நிலையில் மற்றொரு பெண் கவிதா நிதி உதவி வழங்கும்படி கோரிக்கை வைத்தார், இப்படி அடுத்தடுத்த பெண்கள் ஒவ்வொரு கோரிக்கையாக வைக்க , அதற்க்கு பதில் கூறமுடியாமல் பிரச்சாரத்தை களைத்து அடுத்த இடத்திற்கு நகர்ந்தார். இதனால் அந்த பிரச்சார பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.