வலிமை திரைப்படம் கடந்த மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இதனால் அந்த படத்தை வாங்கிய டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாகவும் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார்..
மேலும் இந்தப் படம் லாபமா, நஷ்டமா என கேள்வி எழுப்பியதற்கு திரைப்பட உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியதாவது :- “விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் வலிமை திரைப்படம் 20 நாட்கள் ஆகியும் பல திரையரங்குகளில் நல்ல கூட்டத்துடன் திரையிடப்பட்டு வருகிறது. எங்களை பொறுத்தவரை வலிமை திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக ஒரு மிகப்பெரிய வெற்றி என்று தான் சொல்ல வேண்டும் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் மற்றும் முக்கிய வினியோகஸ்தர்களின் ஒருவரான திருப்பூர் சுப்பிரமணியம் இப்படிக் கூறியது தல ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.