வலிமை படம் காப்பி | 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு | வினோத் மற்றும் போனி கபூர் நீதிமன்றத்தில் பதிலளிக்கும் படி நீதிபதி அதிரடி உத்தரவு

வலிமை படம் காப்பியடிக்க பட்டதாக ஒரு கோடி ருபாய் பணத்தை நாஷ்டா ஈடாக வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்க்கு பதில் அளிக்க கோரி வலிமை படத்தின் இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர்க்கு நீதிமன்றதில் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் வலிமை இந்த படத்தை இயக்கியவர் வினோத் மற்றும் தயாரித்தவர் போனி கபூர். தற்போது இந்த படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் மெட்ரோ படத்தின் சாயலில் உள்ளது என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜேகே கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மெட்ரோ படத்தில் வசதியாக வாழ்வதற்காக சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் போன்றவற்றிற்கு அடிமையாகியுள்ள தனது தம்பியை கதாநாயகனே கொல்லுவது போன்று காட்சிகள், அப்படியே வலிமை படத்திலும் இருக்கிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தற்போது மெட்ரோ படத்தை நாங்கள் பிற மொழிகளிலும் ரீமேக் செய்ய உள்ளதால் அதே கதை மற்றும் கதாபாத்திரங்களை மீண்டும் எடுக்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம், அதனை வலிமை படத்தில் அப்படியே வைத்துள்ளதால் அது எங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது காப்புரிமை சட்டத்தை மீறுவதால் அந்த வலிமைப்படத்தை OTTயில் வெளியிடுவது மட்டும் சாட்டிலைடில் ஒளிபரப்புவது போன்ற செயல்களில் இருந்து தடை செய்ய வேண்டும். மேலும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு எங்களுக்கு பெற்றுதர வேண்டும் என்று கோரி மெட்ரோ படத்தின் தயாரிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி மார்ச் 17-ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி இயக்குனர் வினோத் அவர்களுக்கும் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Spread the love

Related Posts

மக்களவை உறுப்பினர் கோரண்ட்ல மாதவ், பெண் ஒருவருக்கு வீடியோ கால் மூலம் அந்தரங்க உறுப்பை காட்டும் ஒரு வீடியோ வைரல்

இந்துபூர் மக்களவை உறுப்பினர் கோரண்ட்ல மாதவ், பெண் ஒருவருக்கு வீடியோ கால் மூலம் தன்னுடைய அந்தரங்க

தீண்ட தகாத சாதி எது என்று கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை

தீண்ட தகாத சாதி எது என்று மாணவர்களின் வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள ஒரு

வெற்றிகரமாக 3-ஆவது மனைவியுடன் சேர்ந்து தனது 9-ஆவது குழந்தையை பெற்றெடுத்த டெஸ்லா உரிமையாளர் எலன் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலன் மஸ்க்க்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. எலன் மஸ்க் அவர்கள்