அஜித் நடித்த வலிமை திரைப்படத்தில் ஒரு காட்சி அனிமேஷன் ஆமை பொம்மையை வைத்து எடுக்கப்பட்ட ஒரு படத்திலிருந்து உருவிய காட்சி என சமூக வலைதளத்தில் டிரோல் செய்து வருகின்றனர்.
இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் ஹுமா குரேஷி போன்றோர்கள் நடித்து பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த படம்தான் வலிமை. இந்த படம் வெளியானபோது கலவையான விமர்சனங்கள் தான் பெற்றது. ஆனால் குடும்ப ரசிகர்கள் மத்தியில் படம் ஏகோபித்த வரவேற்பு பெற்றதால் இந்தப் படம் வசூல் ரீதியில் ஒரு பெரிய சாதனையை படைத்தது.

உலகமெங்கும் 200 கோடிக்கு மேல் வசூலித்தது என படத்தின் தயாரிப்பாளரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இந்தப் படம் மே 1ம் தேதி ஜீ தமிழில் ஒளிபரப்பு உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது தற்போது இந்தப் படத்தில் வைக்கப்பட்ட ஒரு முக்கியமான காட்சி ஹாலிவுட் படமான Teenage Mutant Ninja Turtles படத்தில் இருந்து அப்படியே காப்பி ஆடிக்கப்பட்ட ஒரு காட்சி என்று அந்த படத்தின் காட்சியை ஒப்பிட்டு இணைய தளத்தில் பதிவிட்டு இருக்கின்றனர்.
வலிமை படத்தில் அந்த பைக் ரெசர்கல் அவர்கள் வில்லனை காப்பாற்ற போலீஸ் வண்டியை சுற்றி வளைத்து உள்ளே இருக்கும் அந்த வில்லனை ரோப் மூலம் வெளியே தூக்கி தப்பிக்க முயற்சி செய்வார்கள். அதே போன்று ஒரு காட்சி இந்த ஆமை படத்திலும் இருப்பதாகவும், இந்த காட்சியை வினோத் அவர்கள் அப்படியே தூக்கி வலிமை படத்தில் வைத்திருக்கிறார் என்று இணையதளத்தில் இந்த காட்சியை பரப்பப்பட்டு வருகிறது இதை பார்த்த அஜித் ரசிகர்களும் சற்று வேதனையில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
What's This H Vinoth ? 🙄 pic.twitter.com/ZAuV9uiIIO
— Madurai Cinemas (@MaduraiCinemas) April 22, 2022
இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்தப் படத்தின் டைட்டில் font டிசைன் தான் அப்படியே வலிமை படத்திற்கும் இருக்கும்.

