“உங்கள் விக்ரம் படத்தை பார்த்தேன், உங்களை தேர்தலில் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது” | கமலுக்கு நக்கலாக பதிவிட்ட வானதி

கமலஹாசனின் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய வானதி சீனிவாசன்.

நடிகர் கமலஹாசன் விஜய் சேதுபதி பகத் பாஸில் உள்ளிட்டோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சென்ற மாதம் திரைக்கு வந்த படம் தான் விக்ரம். இந்த படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை அளித்தனர். மேலும் இந்த படம் 400 கோடி வசூலை தாண்டி உலக அளவில் சாதனை படைத்திருக்கிறது. மேலும் இந்த படத்தின் வெற்றியினால் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்ற கமலஹாசன் அந்த படத்தில் நடித்தவர்களுக்கு பல பரிசுகளை வழங்கினார்.

குறிப்பாக இயக்குனருக்கு சொகுசு கார் ஒன்றையும் படத்தில் ஒரு சின்ன ரோலில் வந்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச்யும் மற்றும் படத்தில் பணி புரிந்த அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு பைக்குகள் என்றும் ஏகப்பட்ட பரிசுகளை அவர் கொடுத்தார். நட்சத்திரங்கள் பாராட்டுகளும் தெரிவித்தனர். இதனை அடுத்து மு க ஸ்டாலின் அவர்களும் பாராட்டு தெரிவித்தார்.

உறுசொன்னீங்களே… செஞ்சீங்களா ?? வழக்கம் போல திமுகவை வறுத்தெடுக்கும் அண்ணாமலை | ஆனா இந்த வாட்டி ஒரு புதிய யுக்தி

சட்டமன்றப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் விக்ரம் படத்தை பார்த்துள்ளார். மேலும் அவர் ட்விட்டர் பக்கத்தில் அவர் இதுகுறித்து வெளியிட்டு இருந்தார். அப்போது அவர் கூறியதாவது :- “தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒருமுறை மகிழ்கிறேன். விக்ரம் திரைப்படம் பார்த்தேன் உங்கள் கலைப் பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள் என அதில் கூறியிருக்கிறார்” சட்டமன்றத் தேர்தலில் கமல் மற்றும் வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி நிலவியது கடைசியில் 1358 வாக்கு வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

ஒருவேளை தேர்தலில் கமல் வெற்றி பெற்றிருந்தால். விக்ரம் போன்ற படத்தில் கமல் நடித்திருப்பார என்ற கேள்வி எழுந்தது. எனவேதான் தேர்தலில் கமலை வீழ்த்தியதற்கு மகிழ்ச்சி அடைவதாக வானதி சீனிவாசன் பதிவிட்டார் என கூறப்படுகிறது.

Spread the love

Related Posts

அப்பா செருப்பு தைக்கும் தொழிலாளி, அம்மா வளையல் வியாபாரி | கேகேஆர் அணிக்காக களமிறங்கும் இந்த ரமேஷ் குமார் யார் ?

ஊருக்கு நடுவில் இருக்கும் ஒரு கிரவுண்டில் அவ்வப்போது டென்னிஸ் பால் டோர்னமெண்ட் வைப்பது நிறைய ஊர்களில்

“அண்ணாமலைக்கு கூடுவது காக்கா கூட்டம்” | சரமாரியாக விமர்சனம் செய்த செல்லூர் ராஜு

அதிமுக-வை துரும்பு அளவுக்கு விமர்சித்தால் நாங்கள் தூண் அளவுக்கு பாஜகவை விமர்சிப்போம் என செல்லூர் ராஜூ

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து 32 ஆண்டுகால சாபத்தை உடைத்தெறிந்தது சரித்திர வெற்றியை பெற்றுள்ளது பாஜக

உத்திரபிரதேசத்தில் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சி கடந்த 32 ஆண்டுகளில் ஆட்சியை தக்கவைத்ததாக சரித்திரமே

x