விஜய் பிறந்தநாளையொட்டி கோவையில் வானதி ஸ்ரீநிவாசன் தலைமையில் விஜய் ரசிக மன்ற நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர் | காரணம் என்ன ?

விஜய் பிறந்த நாள் அன்று விஜய் ரசிகர்கள் வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். தற்போது அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் வானதி சீனிவாசன்.

தமிழக பாஜக கடந்த ஓராண்டு முதலே திமுகவை வசைபாடி தங்களது இருப்பை காட்டி வருகின்றனர். என்னதான் பிரதான எதிர்க்கட்சி அதிமுக வாக இருந்தாலும் பாஜக தான் உண்மையான எதிர்க்கட்சி போல காட்டிக் கொள்கிறார் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை. தற்போது அந்தக் கட்சியின் கோவை தெற்கு பகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற வானதி சீனிவாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் பிறந்தநாள் என்று கூட பாராமல் ட்விட்டரில் விஜயை சாக்கடை என திட்டிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம்

அதில் அவர் கூறி இருப்பது என்னவென்றால் :- “கோவை விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் புதிதாக தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்” என கூறி மேலும் அவர்களின் போட்டோக்களை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இது தற்போது விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் விஜய் பாஜகவுக்கு வேலை செய்கிறாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு முன்னர் வானதி சீனிவாசன் அவர்கள் தனது அரசியல் பதவிக்காக அஜித் ரசிகர்களையும் சப்போர்ட்டுக்கு சேர்த்தது குறிப்பிடத்தக்கது. வலிமை அப்டேட் உலக அளவில் பேமஸான போது நான் கோவையில் ஜெயித்தால் உங்களுக்கு வலிமை அப்டேட் பெற்று தருகிறேன் என அஜித் ரசிகர்களிடம் ஆசைவார்த்தை கூறினார். ஆனால் அதற்கு அஜீத் ரசிகர்கள் மயங்கவில்லை, அவர் சொன்ன அடுத்த நாளே வலிமை அப்டேட் வந்து விட்டது. அதனால் அவரின் கெட்ட எண்ணம் அப்போது நிறைவேறவில்லை. ஆனால் இப்போது விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி அவரின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது எங்கு போய் முடியும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Spread the love

Related Posts

54 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை

இந்திய நாட்டுடைய பாதுகாப்பிற்கும் மற்றும் இறையாண்மைக்கு எதிராக உள்ள 54 சீன செயலிகளுக்கு தற்போது இந்திய

ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து | நடிகர் விஷாலை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற படக்குழு | ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் விஷாலுக்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு

திருமண விழாவில் நெருப்பை பற்ற வைத்து கொண்டு வந்த தம்பதி வைரல் வீடியோ | மணமக்கள் ஷாக்

ஓவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாட்களில் ஒன்றாக திருமணத்தை விரும்புகிறார்கள். சிலர் ஆடம்பரமான விருந்துகள் மற்றும்

x