“பீஸ்ட் படம் பார்த்து மிரண்டு போய்ட்டேன், தளபதி விஜய் இப்டி பண்ணுவாருன்னு நெனைச்சு கூட பாக்கல” | வனிதா ஓபன் டாக்

பீஸ்ட் படம் குறித்து ஒரு சேனலுக்கு நேர்காணல் அளித்த வனிதா விஜயகுமார் விஜயின் பீஸ்ட் படத்தை பார்த்து மிரண்டு விட்டேன் என கூறியிருக்கிறார்.

பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது. விஜய் கேரியரிலேயே இவ்வளவு மோசமான விமர்சனங்களை பெற்ற படங்கள் புலிக்கு அடுத்தது பீஸ்டு தான். அந்த அளவிற்கு மிகவும் கலாய்க்கப்பட்ட ஒரு படமாக பீஸ்ட் இருந்திருக்கிறது. இன்டர்நேஷனல் லெவலுக்கு இந்த படம் ட்ரோல் செய்யப்பட்டது. அதனால் இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இது குறித்தும் அடுத்த தளபதி விஜய் நடிப்பில் வெளியாக போகும் வாரிசு படம் குறித்தும் ஒரு கேள்வியை வனிதா விஜயகுமாரிடம் கேட்டிருக்கின்றனர். அதற்கு பதில் அளித்த வனிதா :- பீஸ்ட் படம் சரியா போகவில்லை அதனால் ரசிகர்கள் பலரும் வாரிசு படத்திற்காக மிகவும் வெயிட் செய்து வருகின்றனர். நான் பீஸ்ட் படத்தை பார்த்தேன் படம் எப்படி இருக்கின்றதோ இல்லையோ அது வேறு விஷயம், ஆனால் அதில் விஜயின் நடன அசைவுகளை பார்த்து நான் மிரண்டு போயிட்டேன்.

ஸ்ரீலங்காவுக்கு விளையாட சென்ற இடத்தில் மலை பாம்புடன் விளையாடும் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் சும்மின்ஸ் | வீடியோ வைரல்

எப்படி இந்த வயதில் இப்படி எல்லாம் இப்படி நடனம் ஆடுகிறார் ? அந்த அழகு, நடனம் எப்போதுமே அவரிடம் இருந்து வருகிறது. அவர் இப்படி எல்லாம் டான்ஸ் செய்வார் என்று நான் நினைச்சு கூட பார்கல என்று கூறிவிட்டு வாரிசு படத்திற்காக நான் வெயிட்டிங்கில் இருக்கிறேன் சீக்கிரம் படத்தை வெளியிடுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். வனிதா விஜயகுமார் மேலும் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்து என்றென்றுமே விஜய் ரசிகை நான் என கூறியிருக்கிறார் இதை தற்போது தளபதி ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

Spread the love

Related Posts

“நயன்தாரா திருமணம் மனித உரிமையை மீறிய ஒரு செயல்” … தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகார்… சிக்கலில் விக்கி நயன்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கல்யாண நிகழ்வின்போது கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்ததால் ஒருவர்

“முஸ்லிம்களிடம் சங்கி சேட்டை செய்வது போல தலித்துகளிடம் செய்யாதீர்கள்” – எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த திருமா

மத்தியில் ஆட்சி இருந்தால் உங்களால் எங்கள் கட்சியை தடை செய்து விட முடியுமா என விடுதலை

“கோவாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பாஜகவுக்கு வாக்களித்து சரித்திர வெற்றியை தந்துள்ளனர். இதே போல் தமிழகத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும்” – அண்ணாமலை

தற்போது நடந்து கொண்டிருக்கிற 5 மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளதால் திரு