“50 லட்சம் கொடுத்து கவுன்சிலரா ஆகி இருக்கேன், என்கிட்ட நீ பேசாத வாயை மூடு” என தூய்மை பணியாளரை திமுக கவுன்சிலர் திட்டிய வீடியோ வைரல்

50 லட்சம் கொடுத்து கவுன்சிலராக ஆகி இருக்கேன். என்கிட்ட நீ பேசாத வாயை மூடு என தூய்மை பணியாளரை திமுக கவுன்சிலர் ஒருத்தர் அவமானமாக பேசி இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டு முதலே எதிர்கட்சிகளான பாஜக அதிமுக தொடர்ந்து திமுக மீது புகார் கலை அடுக்கிக் கொண்டே போகிறது. அதற்கு ஈடாக திமுக காரர்களும் பல தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அதே போல தான் ஒரு சம்பவம் அரங்கேறி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் வடசென்னையில் திமுக பெண் கவுன்சிலர் கணவர் தங்கள் பகுதியில் வீடு கட்டும் ஒரு பெண்ணை மிரட்டி பணம் கேட்ட வீடியோ வைரலானது. மேலும் அதனை கடுமையாக கண்டித்து முதல்வர் ஸ்டாலின் அதில் தலையிட்டு வசூல் வேட்டையில் ஈடுபடும் கவுன்சிலர்களின் பணிகளை ரத்து செய்ய வேண்டும் என முடிவெடுத்தார்.

இந்த சூழ்நிலையில் திமுக கவுன்சில ஒருவர் தூய்மை பணியாளர்களை மிக தரம் தாழ்த்தி பேசும் ஒரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை ஒருவர் தரை குறைவாக பேசி உள்ளார். மேலும் ஆபாச வார்த்தைகளையும் பயன்படுத்தி பேசி உள்ளார். அதில் பேசும் தாமோதரன் என்பவர் வேலூர் மாநகராட்சி 44 வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தவமணி என்பவரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அந்த வீடியோவில் தூய்மை பணியாளர்களை மரியாதை குறைவாக நடத்திப் பேசி உள்ளார். அதில் பேசிய அவர் “என்னை குறை கூற நீ யாருடா 50 லட்சம் செலவு செய்து கவுன்சிலர் ஆகி இருக்கிறேன். இவ்வளவு பணம் செலவு செய்து கவுன்சிலர் ஆகிவிட்டு போற வருவாங்ககளிடம் எல்லாம் நான் பேச்சு வாங்க வேண்டுமா ? என ஆக்ரோஷமாக பேசி உள்ளார்.

தூய்மை பணியாளர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தும் “நீ பேசாத நீ மரியாதையா என் வார்டை விட்டு வெளியே போ என் வார்டில் வேலை செய்ய முடியும் என்றால் நீ இரு இல்லைன்னா இங்க வாழாதே என்று அவரை பார்த்து கூறியுள்ளார். மேலும் நீ வா போ என்று நீ சொல்லக்கூடாது அதை நான் தான் சொல்ல வேண்டும் என அவர் மிரட்டும் தொணியலும் பேசியுள்ளார்.

பொதுமக்கள் சூழ்ந்து இருக்கும் அந்த பகுதியில் தூய்மை பணியாளர்களை இப்படி விரட்டுவது நல்லதற்கல்ல. மேலும் இந்த சண்டையை அங்கிருந்து ஒருவர் வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது மேலும் இவர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Spread the love

Related Posts

“இது எல்லாருக்கும் நடக்குறது தான… ” லிப் லாக் காட்சிகளை பற்றி போல்டாக பேசிய விருமாண்டி பட நடிகை அபிராமி

விருமாண்டி படத்தில் நடித்த அபிராமி படங்களில் வரும் உதட்டு முத்த (Lip Lock Kiss) காட்சிகளை

முன்னழகு தெரிய ரெட் கலர் ஆடையில் கவர்ச்சி போட்டோவை பதிவிட்ட ரம்யா பாண்டியன் | மேலும் புகைப்படங்கள் உள்ளே

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

“நான் என்ன தகுதி இழந்தவளா ?” நக்மாவிற்கு MP சீட் ஒதுக்கப்படவில்லை.. ட்விட்டரில் கேள்வி எழுப்பும் நக்மா… பிஜேபியில் சேருவாரா ?

மாநிலங்களவைத் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததை எதிர்த்து நக்மா காங்கிரஸ்க்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை