புது பட ரிவியூ | சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

இன்று நாம் புது பட ரிவ்யூவில் பார்க்க உள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, ராதிகா சரத்குமார், சித்தி அத்னானி போன்றோர்கள் நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த படத்தினுடைய ஒரு விரிவான விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

கிராமத்தில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் கஷ்டப்படும் மகனை எப்படியாவது ஒரு நல்ல வேலைக்கு அனுப்பி விட வேண்டும் என துடிக்கும் அம்மா. கடைசியில் குடும்ப கஷ்டத்தினால் பம்பாய்யில் வேலை செய்யலாம் என கிளம்பிய ஹீரோவுக்கு அடுத்து அங்கு நடந்த விபரீதங்கள் என்னென்ன என்பதுதான் கதை.

“ஜெயலலிதா அம்மாவை போல என்னை மக்கள் பார்க்கின்றனர்” – சசிகலா

ஒரு மாஸ் ஆக்சன் படத்திற்கு எப்படி கதை இருக்க வேண்டுமோ அதற்கான கச்சிதமாக ஒரு கதை தான் இது. இது ஒரு நாவல் கதை. ஜெயமோகனின் நாவலில் இருந்து இந்த கதை தழுவப்பட்டு இருக்கிறது. படமும் நாவலை போன்று தான் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் பாதி நம்மை அந்த அளவிற்கு ஆச்சர்யப்படுத்தும். படத்தில் சிம்புவின் நடிப்பு மிகவும் அருமை. காதல், ஆக்சன், மாஸ் என அனைத்திலும் வித்தியாசம் காட்டி ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்திருக்கிறார். சிம்புவின் நடிப்பு அவர்களின் ரசிகர்களையும் நிச்சயமாக கவரும். அடுத்ததாக கௌதம் வாசகம் மேனன் தன்னுடைய முந்தைய படங்களைப் போன்று இல்லாமல் இதில் கொஞ்சம் தனித்து தெரிவார். இதற்கு முன்னர் கேங்ஸ்டர் படங்களை அவர் எடுத்தது இல்லை. இதுதான் முதல் முறை தன்னுடைய முதல் முயற்சியிலேயே ஏறத்தாழ சிறப்பாக செய்திருக்கிறார் என்று சொல்லலாம்.

அதற்கடுத்த படத்தில் முக்கிய பலம் என முதுகெலும்பு என்று கூட சொல்லலாம். அது ஏ ஆர் ரகுமானின் இசை தான். பாடல் காட்சிகள் ஆகட்டும் பின்னணி இசை ஆகட்டும். எல்லாவற்றிலும் புகுந்து விளையாடி இருக்கிறார் ஏ ஆர் ரகுமான். அவருடைய பங்களிப்பு இந்த படத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

படத்துடைய முக்கியமான மைனஸ் என்று பார்த்தால் இந்த படத்தில் இருக்கும் இரண்டாம் பாதி தான். முதல் பாதி கொஞ்சம் நன்றாகவே இருந்தது. ஆனால் இரண்டாம் பாதி கொஞ்சம் சுமார் ரகமாக தான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ட்ரைலரிலேயே பல விஷயங்களை இவர்கள் வெளிப்படையாக கூறிவிட்டனர். அதனால் இரண்டாம் பாதி படம் பார்ப்பதற்கு கொஞ்சம் சுவாரசியம் இல்லை. இதனாலே இரண்டாம் பாதி முதல் பாதியிடம் தோற்று இருக்கிறது.

முதல் பாதியை போலவே இரண்டாம் பாதியையும் வைத்திருந்தால் இந்த படம் மிகவும் ஒரு நல்ல படமாக வந்திருக்கும். ஆனால் அதை இவர்கள் செய்ய தவறிவிட்டதால் இந்த படம் தற்போது ஒரு ஆவரேஜ் படமாகவே இருக்கிறது. சிம்பு ரசிகர்கள் நிச்சயமாக இந்த படத்தை விரும்பி பார்ப்பார்கள். அவர்களுக்கு ஏற்ற எல்லாம் விஷயங்களும் இந்த படத்தில் உள்ளது. ஜீவிஎம் ரசிகர்களும் ரசித்து பார்க்கக்கூடிய அளவிற்கு படம் இருக்கிறது. ஆனால் பொதுவான சினிமா ரசிகர்களை இந்த படம் திருப்தி செய்யுமா என கேட்டால் கேள்விக்குறி தான்.

Kingwoods Rating :- 3/5

Spread the love

Related Posts

ரசிகர்களை விட போலீஸ்கள் தான் அதிகம் உள்ளனர் | வெறிச்சோடி காணப்படும் திரையரங்குகள் | வேலை நாளில் ரிலீஸ் செய்தது தான் காரணமா ?

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டாத ரசிகர்களால் நாமக்கல் மாவட்டத்தில்

போட்டோக்கு 2 ஆயிரம், விடீயோ காலுக்கு 30 ஆயிரம், கவர்ச்சியை வைத்து புதிய பிசினஸில் இறங்கிய நடிகை கிரண் | முழு விவரம் என்ன ?

நடிகை கிரண் அவர்கள் தன்னுடைய கவர்ச்சியை வைத்து புதியதாக ஒரு பிஸினஸ் ஸ்டார்ட் செய்து உள்ளார்.

“முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்” பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். இன்றைக்கு

x