வலிமை படத்தை ரொம்ப எதிர் பார்த்துக் விட்டோமோ என வலிமை படத்தில் ஒருசில நெகட்டிவான விஷயங்களை சொல்லி இருக்கிறார் வெங்கட் பிரபு.
அவரின் மன்மதலீலை படத்தின் பிரமோஷனுக்காக பிரபல யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்த வெங்கட் பிரபுவிடம் வலிமை படத்தைப் பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் வலிமை படம் உண்மையாகவே ஒரு நல்ல ஆக்சன் திரைப்படம், ஆனால் அந்த படத்தில் நாம் அதிகம் எதிர்பார்த்து விட்டோமோ என ஒரு ரசிகரின் பார்வையில் பார்க்கும் போது எனக்கு தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார்.

தல- வினோத் இரண்டு பேருமே ஒரு படத்தில் இணைய போகிறார்கள் என்றால் தானாகவே அந்த எதிர்பார்ப்பு எல்லோரிடமும் வந்து விடும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு விஷயம் படத்தில் மிஸ் ஆகிறது என்று தோன்ற வைக்கிறது, என சில பல நெகட்டிவ் விமர்சனங்களை வைத்துள்ளார் வெங்கட் பிரபு.

இந்த வீடியோ தற்போது தல ரசிகர்களின் பார்வைக்கு வந்து அவர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
VP Always stuns with his Honesty.. #Valimai Review nu வேற எந்த Celeb கிட்ட கேட்ருந்தாலும் இவ்ளோ வெளிப்படையான பதில் வந்துருக்காது.. 👏❤️ pic.twitter.com/8vzXMuOgrL
— தோழர் ஆதி™ 😎🔥 (@RjAadhi2point0) March 31, 2022