கொல்கத்தா வீரர்களான வெங்கடேஷ் மற்றும் வருண் இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றியும் தளபதி விஜய் பற்றியும் நேற்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நேற்று மும்பை அணிக்கு கொல்கத்தா அணிக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி மும்பை அணியை எளிதில் வென்று ஒரு அபார வெற்றியைப் பெற்றது. அந்த ஆட்டத்தில் தமிழக வீரர்கள் வெங்கடேஷ் மற்றும் சக்கரவர்த்தியும் மீண்டும் அணிக்கு திரும்பியதும் அந்த அணியின் வெற்றிக்கு ஒரு பெரிய பலமாக இருந்தது.
டோனி தயாரிக்கவிருக்கும் படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் | வெளியான ஆச்சரியமான தகவல்

ஆட்டம் முடிந்த பிறகு சுமார் 4 அவார்டுகளை தட்டிச் சென்ற வெங்கியுடனும் மற்றும் ஒரு பெரிய விக்கெட் எடுத்து கேகேஆர் வெற்றியை உறுதி செய்ய உறுதுணையாக இருந்த வருணும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு தமிழில் பேட்டி அளித்தனர். அப்போது அவர்களிடம் தமிழ் வர்ணனையாளர் மற்றும் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் யோ மகேஷ் அவர்கள் வெங்கி மற்றும் வருணிடம் “நீங்கள் இருவரும் தளபதி விஜய் ரசிகர்கள் தானே உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்” என்று அவரின் கேள்வியை தொடங்க சட்டென்று குறுக்கிட்ட வெங்கி “ச்சே …ச்சே… நான் விஜய் ரசிகர் எல்லாம் கிடையாது.. நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன்” என்று பளிச்சென்று பதிலளித்தார்.
அப்போது கேள்வியை வருண் பக்கம் மட்டுமே கேட்ட யோ மகேஷ் அவர்கள் பிஸ்டு படத்தை பற்றி கேட்டு இருந்தார். அப்போது அவரின் கேள்விக்கு பதிலளித்த வருண் அவர்கள் “நான் படம் இன்னும் பார்க்கவில்லை அண்ணா, டைம் கிடைத்தால் கண்டிப்பாக பார்ப்பேன். இங்கே கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருப்பதால் என்னால் திரையரங்கிற்கு செல்ல அனுமதி இல்லை” என கூறியிருந்தார்.

மேலும் வெங்கடேஷிடம் ரஜினிகாந்த் படத்தின் சம்பந்தமான ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதையும் யோ மகேஷ் தான் கேட்டார். அது என்னவென்றால் விஜயின் பீஸ்ட் படத்தை எடுத்த நெல்சன் தான் அடுத்த ரஜினி படத்தையும் எடுக்கவிருக்கிறார் உங்களுடைய கருத்து என்ன என வினவினார் அதற்கு பதிலளித்த வெங்கடேஷ் “படம் நல்லா இருக்கோ, இல்லையோ தலைவர் படத்த ஸ்க்ரீன்ல பார்த்தாலே போதும்” என்று தீவிர ரசிகரை போல் எதார்த்தமாக பதிலளித்தார். இதிலிருந்தே தெரிகிறது இவர் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் ரசிகர் என்று. தற்போது இதை சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Yomi : varun & venki ரெண்டு பேரும் தளபதி பேன்..
— Raguvaran Karunakaran (@1991ragu) May 10, 2022
Venki : நான் இல்ல. .. நான் ரஜினி பேன்.. 💥💥@venkateshiyer 💥❤ #Thalaivar169#KKR @StarSportsTamil pic.twitter.com/VRxRkubbKq