ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த கண்காட்சியில் ராட்டினம் அருந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பேருந்து நிலையம் அருகே கண்காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த கண்காட்சியில் நன்றாக சுற்றிக்கொண்டிருந்த கிடைமட்ட ராட்டினத்தின் கேபிள் திடீரென அருந்து ராட்டினம் கீழே விழுந்துள்ளது.

இந்த விபத்தில் 11 முதல் 15 குழந்தைகள் காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கிருந்த நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர் .
ராஜஸ்தான்: அஜ்மீர் கண்காட்சியில் ராட்டினம் கீழே விழுந்து விபத்து; அதில் அமர்ந்திருந்த 11 சிறுவர், சிறுமிகள் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்! pic.twitter.com/HUrAJA4bb4
— Jaya Tv Manickam (@manickamjayatv) March 22, 2023
