“சாம்பார் பொட்டலம் போல பெட்ரோல் பொட்டலத்தை வீசிவிடுவேன்” | இந்திய அளவில் ட்ரெண்ட் | ட்விட்டரில் விஜய் ரசிகர் ஆவேசம்

ட்விட்டர் ஸ்பெஸில் விஜய் ரசிகர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி விடுவேன் என்று அஜித் ரசிகர்களை மிரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ட்விட்டரில் கடந்த சில மாதங்களாகவே ஸ்பேஸ் என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது. அந்த தொழில்நுட்பத்தின் மூலம் நம் நண்பர்களுடன் வாய்ஸ் கால் போல பேசிக்கொள்ளலாம். எப்படி கான்ஃபரன்ஸ் கால் இருக்கிறதோ அதுபோல் பத்து பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் பேசி தங்களுடைய அன்பை பகிர்ந்து கொள்ளலாம். தூரத்தில் இருக்கும் நபர்களை வாய்ஸ் கால் மூலம் இணைத்து குஷிப்படுத்த இதுபோன்ற தொழில்நுட்ப அமைக்கப்பட்டது. ஆனால் அந்தத் தொழில்நுட்பம் தற்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் தனிமனித தாக்குதலையும் சம்பாதித்து வருகிறது.

Viral Video | மேடையில் மைக்கை பிடுங்கி மோடி தான் இந்தியாவின் ஹீரோ என்று கூறிய நபர் | பாதியில் கூட்டத்தை களைத்து விட்டு தெறித்து ஓடிய திருமா | வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் பேசிக் கொண்டிருந்த ஒரு ட்விட்டர் ஸ்பெஸில் “எங்களிடம் ஒரு பெட்ரோல் சைக்கோ உள்ளான் சாம்பார் பாக்கெட் போல் கட்டிக் கொண்டு வந்து பெட்ரோல் குண்டை முகத்தில் வீசி விடுவான், அந்த பெட்ரோல் சைக்கோவை வைத்து அஜித் ரசிகர்களை தாக்குவேன்” என வெளிப்படையாக பேசியுள்ளார். இப்படியான ஒரு பொது வெளியில் வெளிப்படையாக ஒரு தனி மனிதனை தாக்கும் பொருட்டு பேசுவது மிகவும் அபாயகரமான ஒரு செயலாகும். இதுகுறித்து பெட்ரோல் சைக்கோ என்ற ஹாஷ்டகும் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்திய அளவில் டேக் ட்ரெண்ட் ஆனதால் ட்விட்டரை டீ-அக்டிவேட் செய்து சமூக வலைதள பக்கதிற்கு பூட்டு போட்டுவிட்டு சென்றுவிட்டார்

என்னதான் அவர் விளையாட்டுக்கு அப்படி சொன்னாலும் சமூகவலைதளத்தில் அதை பேசுவது குற்ற செயலாகும். அதனால் இதை போலீசாரும் பொதுமக்களும் தட்டிக் கேட்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தற்போது விவாதித்து வருகின்றனர். இது குறித்து அகில உலக ஆன்மிக இந்துமத கட்சியின் தலைவர் திரு ஜே எஸ் கே கோபி அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து பெட்ரோல் பாம் குறித்துப் பேசும் இந்த நபர்கள் மீது நடவடிக்கை வேண்டும், என தமிழக காவல்துறையை டேக் செய்து போஸ்ட் போட்டு இருக்கிறார் இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

Spread the love

Related Posts

பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் திடீரென நிலை தடுமாறி கீழே விழும் பரபரப்பான வீடியோ காட்சி

அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர் ஒருவர் தவறி கீழே விழும் வீடியோ

மது பிரியர்களுக்கு குஷி | காலி மதுபாட்டில்களை கடைகளில் கொண்டு வந்து கொடுத்து 10 ரூபாயை பெற்று கொள்ளலாம்

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபானக் கடைகளில் வாங்கி செல்லும் மதுபான பாட்டில்களை மீண்டும் கொண்டு

“பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் இல்லாதது நல்லது தான்”- மணிரத்னம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை உலகம் எங்கும் பல திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. இந்த

x