தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான முன்பதிவு பல திரையரங்குகளில் இப்போதுதே தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெற்றி திரையரங்கம் முதல் பல திரையரங்குகளில் முன்பதிவு சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழவதும் 900 திரையரங்ககளுக்கு மேலாக வெளியிடப்பட்ட வலிமை படத்திற்கு சரிசமமாக முதல்நாள் ஓபனிங் வசூல் இந்த படத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் ரசிகர்கள் ரசிகர் மன்ற சிறப்பு காட்சி ரத்தனாதால் வீதியில் இறங்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் பாரதி சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரிடமும் போலீசார் எவ்வளவு கூறியும் அவர்கள் கலைந்து போகாததால் தடியடி நடத்தி கலைந்து போக செய்துள்ளனர் போலீசார். பீஸ்ட் படத்தின் ரசிகர் மன்ற காட்சி ரத்தானதால் தான் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது என போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும் விஜய் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி போராட்டக்காரர்களை களைந்து போக செய்துள்ளனர்.
அதை பார்த்து சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் பொங்கி எழுந்து உள்ளனர் இதற்கு முன் விஜய் அவரின் பிகில் ஆடியோ லான்ச் விழாவில் “என்னை என்ன வேணாலும் பண்ணுங்க, ஆனால் என் ரசிகர் மீது கை வைக்காதீங்க” என்று கூறினார் தற்போது இந்த மாதிரியான ஒரு செயல் நிகழ்ந்து இருப்பதால் விஜய் இதற்கு குரல் கொடுப்பாரா என்று ரசிகர்கள் எதிர் பாத்து காத்திருக்கின்றனர்.
