திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும் என பீஸ்ட் படத்தில் வரும் லிரிக்ஸை உண்மையாகவே செய்து காட்டியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

பீஸ்ட் படம் ஓடும் திரையரங்கில் சவுண்ட் சிஸ்டம் சரியில்லாததால் படம் சில இடங்களில் தடைப்பட்டு தடைப்பட்டு தொடங்கியது இதனால் அதிருப்தி அடைந்த விஜய் ரசிகர்கள் அந்த தியேட்டரில் உள்ள ஸ்கிரீனுக்கு தீ வைத்து விட்டனர் இதைக் கண்ட திரையரங்கு உரிமையாளர்கள் உடனடியாக அந்த காட்சியை நிறுத்திவிட்டனர்.

திரைப்படத்தில் உள்ள வார்த்தைகளை போலவே உண்மையாலும் திரைக்கு தீ வைத்ததை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீம்ஸ் போட்டு வருகின்றனர். என்னதான் இதை காமெடியாக சித்தரித்து மீம்கள் போட்டாலும் அந்த திரையரங்கு உரிமையாளர் அந்த ஸ்க்ரீனை வாங்குவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது வருத்தமாகத்தான் உள்ளது.
#BIG_BREAKING: நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் சரியாக இல்லாத விரக்தியில் தியேட்டரின் திரையை கொளுத்தி விஜய் ரசிகர்கள் வெறிச்செயல்.#BeastFDFS #BEAST #BeastReview pic.twitter.com/ZTXcHPh0ge
— TN Theatres Association (@TNTheatres_) April 13, 2022