மதுரை ஆதீனம் நான்கு நாட்களுக்கு முன் நடிகர் விஜய்யின் படத்தை புறக்கணியுங்கள். அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்று பேசி இருந்தார். அதில் பேசிய அவர் நடிகர் விஜய் நடித்துள்ள துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விநாயகக் கடவுளை கேள்வியாக பேசியுள்ளார்.
இந்தப் பேச்சுகளை தளபதி ரசிகர்கள் கேட்டதும் அவர்கள் மத்தியில் மிகப் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் மதுரை ஆதீனத்தை கண்டித்து மதுரையில் விஜய் ரசிகர்கள் மதுரை ஆதீனத்தை கண்டித்த ஒரு போஸ்டரை ஒட்டி உள்ளனர். தற்போது அந்த போஸ்டர் சமூக வலைதளம் முழுவதும் தீயாய் பரவுகிறது.

மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை முழுவதும் போஸ்டரில் ஒட்டப்பட்டிருக்கும் வார்த்தைகள் என்னவென்றால் “எச்சரிக்கை மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை கொள்ளை அடிக்கத் திட்டம் போடுறீங்களே அப்பா, நீங்க எல்லாம் தளபதியை பற்றி பேசலாமா தப்பா ? வீண் விளம்பரத்திற்காக கோமாவில் எழுந்து வந்து பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி மதம் எதுவுமே இல்லை. தளபதி மேல் கொண்ட அன்புக்கு வானமே எல்லை” என்று இப்படியாக வாசகங்களுடன் அந்த போஸ்டர் மதுரை எங்கும் ஒட்டப்பட்டிருக்கிறது.
