தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது திரைக்கு வர காத்திருக்கும் படம் தான் பீஸ்ட். இந்த படத்திற்கு ஆடியோ லான்ச் விழா நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக சன் டிவியில் இன்டர்வியூ போன்று வைத்து தான் ப்ரோமோஷன் செய்யப்படுகிறது. அதன் பிறகு அவரின் 66 ஆவது படத்தின் பூஜையில் கலந்துகொண்ட விஜய் அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவர் நடிக்கப் போவது கண்டு அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதன் பிறகு நேற்று விஜய் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியானது அந்த அறிக்கையில் கூறப் பட்டிருப்பது என்னவென்றால் “அரசுப் பதவிகளில் உள்ளோர்களை அரசியல் கட்சித் தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கைகளில் இணையதளங்களில் போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ பதிவிடவும் மீம் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது. இது நம் தளபதி விஜய் அவர்களின் கடுமையான உத்தரவின்பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவித்திருந்தோம்.

அதனை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு இயக்கத்தை விட்டும் நீக்கி உள்ளோம். இருப்பினும் நாம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலை மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தெரியப்படுத்திக் கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நேற்று நடிகர் விஜய் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்தபோது இரண்டு பேரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது அதைக்கண்ட தளபதி ரசிகர்கள் “தளபதியும் தளபதியும்” என பதிவிட்டு சிலர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை கிண்டலடித்த பதிவுகளும் அரசியல் நோக்க பதிவுகளும் சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்டதாக தெரிகிறது. இதனைக் கண்ட விஜய். இதற்கு மேல் இதை வளர விட கூடாது என்பதற்காகவும் இதனைச் சொல்லி இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இனிமேல் விஜயை தளபதி என்று அழைக்காதீர்கள் என அறிக்கை வந்தாலும் அதிசய பட இல்லை.
#Vijay And #Mkstalin At #Ags Daughter Reception #Thalalathy² 🔥🔥🔥🔥 pic.twitter.com/jyOz9D1gmT
— chettyrajubhai (@chettyrajubhai) April 6, 2022