தளபதி விஜயின் தாய் மற்றும் தந்தையர் ஆன எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் மணிவிழா கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வளைத்ததில் வெளியாகி சொந்த மகன் இல்லாமல் இந்த மணிவிழா நடக்கிறதே என்று பார்ப்பவர்கள் உருகும் அளவிற்கு செய்திருக்கிறது.
நம் நாட்டை பொருத்தவரை எந்த சுப நிகழ்ச்சிகள் என்றாலும் அதற்கு தவறாமல் கலந்து கொண்டு ஜாதி மத பெதம் இன்றி அன்பை பரிமாறி கொள்வார்கள். ஒரு வீட்டில் விசேஷம் நடக்கிறது என்றால் அக்கம் பக்கத்தினரிலிருந்து வெளியூர்களில் இருக்கும் உறவினர்களை வரை கூப்பிட்டு பந்தி பரிமாறி நலம் விசாரித்துசெல்லும் நம்முடைய தமிழ்நாட்டில் சொந்த அம்மா அப்பாவிற்கு மணிவிழா நடக்கும் போது கூட அந்த விசேஷத்தில் சொந்த மகன் இல்லாமல் இருப்பது எவ்வளவு வேதனையான விஷயமாகும். அதை தற்போது தன்னுடைய தாய் தந்தையருக்கு அளித்திருக்கிறார் நடிகர் தளபதி விஜய்.

தளபதி விஜய் பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவர் பெயரை சொன்னாலே ஆறு வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ஒரு பிரபலமான நடிகர் தளபதி விஜய். இவருக்கு கடந்த ஒரு சில வருடங்களாகவே தனது தாய் தந்தையுடன் சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர்களை விட்டு ஒதுங்கியிருக்கிறார் தளபதி விஜய். ஒரு நேர்காணலில் கூட எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் என்னுடைய மகன் என்னிடம் பேசினால் போதும் எங்களிடம் வீட்டிற்கு வந்து ஒரு நாள் எங்களுடன் உணவு அருந்தினால் போதும் அதுவே எங்களுக்கு போதுமானது என மகன் தங்களுடன் இல்லாத ஏக்கத்தினை கண்களில் நீர் வராத குறையாக புலம்பினார்.

ஒரு பெற்றோரை இப்படி புலம்ப வைத்தால் அது எந்த மகனுக்கும் நன்மையை தராது என அப்போது விஜய்யை பலரும் கண்டித்தனர். கங்கை அமரன் கூட ஒரு மேடையில் பெற்றோர்களை சந்திக்காமல் அப்படி என்ன வேலை செய்கிறீர்கள் என்று விஜய்யை கடுமையாக விமர்சித்தார். தற்போது அது ஒரு படி மேலே போய் இவர்களின் மணி விழாவில் கூட கலந்து கொள்ள முடியாத நிலைமைக்கு சென்று இருக்கிறது. இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உருகச் செய்திருக்கிறது.

புன்னகையோடு இருக்க வேண்டிய தம்பதிகள் மகன் தங்களது மணிவிழாவின் பொது அருகில் இல்லாத குறையினால் முகத்தில் சிறிதளவு குட சிரிப்பு இல்லாமல் சோகத்துடன் காட்சி அளிக்கும் அந்த புகைப்படங்களை பார்க்கவே நெஞ்சம் மறுக்கிறது. மிகவும் சிம்பிள் ஆக அந்த மணிவிழா நடைபெற்றது. கடைசி காலத்தில் பெற்றோர்களுடன் ஒன்று சேராமல் அப்படி என்ன நீங்கள் சாதித்து விடப் போகிறீர்கள் என விஜய்யை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
