விஜயை தனிமையில் சந்தித்த திரிஷா.? அடுத்த படத்துக்கு ஜோடியாகிவிட்டார்.. விஜய்க்கு கண்டிஷன் மனைவி

விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விஜய் 67’ படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் உறுதியாகும்பட்சத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் நடிகை த்ரிஷா இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘விக்ரம்’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜயுடன் கைகோக்கிறார். கேங்ஸ்டர் படமாக உருவாகும் இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது. ‘விஜய் 67’ என அழைக்கப்படும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யை பொறுத்தவரை அவர் தெலுங்கு இயக்குநர் வம்சியுடன் இணைந்து ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜும் – விஜய்யும் இணையும் ‘விஜய்67’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விஜய் 67’ படத்தில் நடிகை சமந்தா போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் கூறப்பட்டது. தற்போது, மற்றொரு அப்டேட்டாக நடிகை த்ரிஷா, விஜய்யின் மனைவியாக இப்படத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இறுதியாக அவர் விஜயுடன் இணைந்து 2008-ம் ஆண்டு வெளியான ‘குருவி’ படத்தில் நடித்திருந்தார். இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை த்ரிஷா நடிக்கும் 5-வது படம் இது என்பதும், 14 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைய உள்ளதும் கூடுதல் தகவல். முன்னதாக ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘குருவி’ படங்களில் விஜய்யுடன் த்ரிஷா இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

விஜயுடன் முதல் படம் திரிஷா படிக்கும்போதே இருவருக்கும் ஒரு ஈர்ப்பு உருவானது… அது 5 படங்கள் வரை இருவரையும் அழைத்துச்சென்றது, இருவரின் உறவும் மேலும் நெருக்கமாக வளரவே இருவரும் படப்பிடிப்பு மட்டுமில்லாமல் வெளியில் சுற்றுவது, காரில் ஒன்றாக போவது, லொகேஷன் பார்க்க இருவரும் வாரக்கணக்கில் சுற்றுவதுமாக இருந்தனர், அது எப்படியோ மனைவி சங்கீதாவுக்கு தெரியவர விஜயை அழைத்து இனிமேல் நடிகை திரிஷாவுடன் நீங்க ஜோடியாக நடிக்கக்கூடாது என கண்டிஷன் போட்டாராம். அன்றிலிருந்து இன்றுவரை விஜயின் ஜோடியை தீர்மானிப்பது மனைவி சங்கீதா தான் என சினிமா வட்டாரங்கள் கூறுகிறார்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பொது விஜயுடன் திரிஷா நடிப்பது விஜய் மனைவி சங்கீதா எப்படி அனுமதிப்பார் என பொறுத்திருந்துபார்க்கலாம்.

Spread the love

Related Posts

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவலில் விசாரிக்க அனுமதி மறுப்பு

ஜெயக்குமாரை ஐந்து நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி இருந்தனர் இந்நிலையில் ஜெயக்குமாரை காவலில் எடுத்து

சேலம் எட்டு வழி சாலை பற்றி எங்கள் ஆட்சியில் எதிர்த்து விட்டு தற்போது அதற்க்கு ஆதரிக்கின்றனர் திமுக | கிழித்து தொங்கவிட்ட EPS

சேலம் மாநகராட்சியில் தையல் மையத்தை திறந்த எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி

வெள்ளை நிற மேலாடையை அணிந்து முன்னழகை காட்டி வசீகரிக்கும் நடிகை ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

x