தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் டிலிப்குமார் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்திருக்கும் படம்தான் பீஸ்ட். இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் தான் ரசிகர்களிடையே வந்துள்ளது. மேலும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து இந்த படம் தியேட்டர்களில் ஓடுவது என்பது சந்தேகம்தான் என்று இணையதள வாசிகள் கூறிவருகின்றனர்.
இந்தப் படத்திற்கு விஜய் ரசிகர்கள் மீது ஒரு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் அந்த எதிர்பார்ப்பு ஒட்டுமொத்தமாக நெல்சன் கலைத்துவிட்டார் என்பதுதான் உண்மை என பேச்சு அடிபடுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஒரு வசனம் இருக்கிறது அவர் ஒரு தீவிரவாதியை கையில் தூக்கிக் கொண்டு வரும்போது வீடிவி கணேசன் அவரைப் பார்த்து ஒரு டயலாக் சொல்கிறார். அந்த டயலாக் அஜித் ரசிகர்களை தாக்கும் படி உள்ளது என அவர்கள் கூறி வருகின்றனர். அது என்னவென்றால் வீடிவி கணேசன் விஜய்யை பார்த்து ஆளை தூக்கிட்டு வருவான்னு பார்த்தா அமையை தூக்கிட்டு வர்றான் என்று சொல்லுவார். ஆமை என்பது அஜித் ரசிகர்களை கலாய்க்க விஜய் ரசிகர்கள் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை. அந்த வார்த்தையை படத்தில் பயன்படுத்தியதால் விஜய் அவர்கள் அஜித் ரசிகர்களை மறைமுகமாக தாக்குகிறார என்று கேள்வி எழுகிறது.
