கல்வி கற்கும் இடத்தில் மதத்தை புகுத்துவது தீவிரவாதத்தை விட மோசமானது | விஜயகாந்த் ஆவேசம்

கர்நாடகாவில் ஹிஜாப் மற்றும் காவி துண்டு பிரச்சனை வலுவடைந்து நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆகையால் அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்றில் இருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவித்தது அந்த அரசு.

தற்போது இந்த சூழலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இது தொடர்பாக கருத்தினை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அதில் அவர் கூறியதாவது :-

“கல்வி கற்கும் இடத்தில் மதத்தை புகுத்துவது தீவிரவாதத்தை விட மோசமானது கல்வியை கற்கும் இடத்தில் அனைவரும் சமம் என்ற உணர்வு வரவேண்டும்.

இதற்காகத்தான் மாணவர்களுக்கு சீருடை என்ற திட்டமே கொண்டுவரப்பட்டது கல்விக்கும் மதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை கல்வி கற்கும் இடத்தில் மதத்தை கொண்டுவந்து புகுத்துவது மிகவும் அபாயகரமான விஷயம்.

இதனை வளரவிட்டால் தவறான ஒரு முன்னுதாரணமாக அமைந்து விடும் எனவே இரும்புக்கரம் கொண்டு உடனே இதை அடக்க வேண்டும்” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Spread the love

Related Posts

“திறந்து காட்டு….” என கேட்ட ரசிகர் | தக்க பதிலடி கொடுத்த குக் வித் கோமாளி பிரபலம்

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சுனிதாவிடம் நெட்டிசன் ஒருவர் கேட்ட ஒரு மோசமான கேள்விக்கு

ஹிஜாப் விவகாரம் : அவசர தீர்ப்பு வழங்க முடியாது … சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

கடந்த ஒரு வார காலமாக கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை பெரும் பிரச்சனையாக தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. கர்நாடகாவில்