வாழ்க்கையில் மிகவும் போராட்ட குணம் மிக்கவர் விஜயகாந்த் என அவரது பிறந்த நாளன்று சரத்குமார் நெகிழ்ச்சியாக பேசி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது வெளியாகிய வைரல் ஆகி வருகிறது, சினிமா அரசியல் என இரண்டிலும் நல்ல பெயரை சம்பாதித்தவர் என்றால் அது விஜயகாந்த் மட்டும்தான். 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை திரைப்படம் மூலம் மக்களுக்கு அறிமுகம் ஆனார் விஜயகாந்த். ஆனால் 1980 ஆம் ஆண்டு வெளியான தூரத்து இடி முழக்கம் படம் தான் அவரை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது.
150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் விஜயகாந்த். பலபேர் வசூலுக்காக மட்டும் சினிமாவை பார்க்கும் நேரத்தில் எல்லா தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று படம் நடித்தவர் விஜயகாந்த். தனக்கு போட்டியாக இருந்த சக நடிகர்களையும் அரவணைத்து அனுசரித்து சென்றார் இவர். அதனால்தான் இவர் எல்லோருக்கும் பிடித்த ஒரு நடிகராக விஜயகாந்த் என்றும் உள்ளார். 1984 ஆம் ஆண்டில் விஜயகாந்த் பதினெட்டு படங்களில் நடித்து சினிமாத்துறையில் ஒரே ஆண்டில் அத்தனை படம் நடித்த நடிகர் என சாதனை படைத்தார்.

மேலும் 1999 ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக நல்ல சேவைகளை நடிகர் சங்கத்திற்கு செய்து வந்தார். நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தினார். அந்த அளவிற்கு எல்லோரிடமும் நட்பும் அன்புடனும் பலரும் விஜயகாந்த்திற்கு இன்று பிறந்தநாள் என்பதால் பல முன்னணி நடிகர்கள் அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சரத்குமார் அவர்கள் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் வாழ்க்கையில் எந்த ஒரு பின்னடைவு இருந்தாலும் அதிலிருந்து போராடி வெற்றி பெற்றவர் விஜயகாந்த் அவர்கள். இந்த போராட்ட குணம் தான் அவரிடத்தில் உள்ளது. மீண்டும் உங்கள் ரசிகர்களுக்காகவும் எங்களைப் போன்ற சகோதரர்களுக்காகவும் புத்துணர்ச்சி பெற்று இந்த பிறந்தநாள் முதல் சிறப்பாக எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என அவருக்கு அன்பு தம்பி ஆகிய நான் வேண்டிக் கொள்கிறேன் என்று கூறி மீண்டும் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நான் பார்க்க வேண்டும் என அந்த வீடியோவை முடித்திருக்கிறார் சரத்குமார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரமாக பரவி வருகிறது.
