நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி வலது கையில் உள்ள விரல்களை அகற்றி விட்டனர்.
தேமுதிகவின் கழகத் தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே உடல் நலம் குன்றி ஆளே அடையாளம் தெரியாத போல மாறி இருக்கிறார். இதனால் அவரை அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதித்து அவரின் உடல்நிலையை குடும்பத்தார் கண்காணித்து வருகின்றனர்.

தற்போது தேமுதிகவின் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கூறியுள்ளதாவது :- “நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்சினையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்த ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார்.
மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டிருக்கிறது.
