KingwoodsNews Logo

📂 பகுப்புகள்

🔴 Live 🔹 பிறர் கண்களை பார்த்து பேசினால் கர்மா Transfer ஆகுமா🔹 விஜய் திமுகவை எதிர்த்தால் விசிக தாண்டி தான் போகணும் யாராகஇருந்தாலும்🔹 விஜய் மாநாடு டம்மி – என் மாநாடு இந்த உலகமே பாக்கபோகுது.. சீமான் சொன்ன முக்கிய தகவல்🔹 விஜயகாந்த் முன்னாடி என் மகன் விஜய் ஒருஆளே இல்ல அவன் டம்மி.. உடைத்த SAC நடந்தது இதுதான்..🔹 உதயநிதி பதவிக்கு சிக்கல் அடிமடியில் கைவைத்த அமிட்ஷா என்ன நடந்தது..🔹 அமிட்ஷா வருகை விஜய்க்கு வந்த தலைவலி.. கூட்டணி பெரிய மாற்றம்🔹 விஜய் மாநாடு கூட்டத்தால் ஆடிப்போன திமுக என்ன நடந்தது தெரியுமா..!🔹 விஜய்க்கு எதிராக சட்டமன்றத் தேர்தலில் போட்டியில்லை – சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்?🔹 விஜயகாந்தை காப்பி அடிக்கும் விஜய் – பிரேமலதா கொடுத்த ஷாக் பதில்🔹 திமுக 4 வருட ஆட்சியில் ஈர்த்த முதலீடு ரூ.11 லட்சம் கோடி மேல் எப்படி தெரியுமா..?

விஜயகாந்தை காப்பி அடிக்கும் விஜய் – பிரேமலதா கொடுத்த ஷாக் பதில்

விஜயகாந்தை காப்பி அடிக்கும் விஜய் - பிரேமலதா கொடுத்த ஷாக் பதில் மயிலாடுதுறையில் நடைபெற்ற “உள்ளம் தேடி, இல்லம் நாடி” பிரசாரப் பயணத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

விஜயகாந்தை காப்பி அடிக்கும் விஜய் – பிரேமலதா கொடுத்த ஷாக் பதில் மயிலாடுதுறையில் நடைபெற்ற “உள்ளம் தேடி, இல்லம் நாடி” பிரசாரப் பயணத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். சின்னக்கடைத்தெருவில் தொடங்கிய இந்த நடைப்பயணம் கால்டெக்ஸ் பகுதிவரை நடைபெற்றது. பொதுமக்களை சந்தித்த அவர், மயிலாடுதுறை தொகுதி எப்போதும் தேமுதிகவின் வலுவான கோட்டையாக இருந்து வருவதாகவும், வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவோம் என்றும் உறுதியளித்தார். வெற்றி பெற்றால் நகராட்சி புதைசாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும், புறவழிச்சாலை அமைக்கப்படும், புதிய பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறினார். மேலும், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ளதால் அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டாஸ்மாக் கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

விஜயகாந்தை காப்பி அடிக்கும் விஜய் – பிரேமலதா கொடுத்த ஷாக் பதில்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பெருமை எனக் கூறினார். விசிக திருமவளவனுடன் சந்திப்பு ஏன் என்ற கிங்வூட்ஸ் செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருமாவளவனுடன் நடந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தம் மட்டுமே, அதில் எந்த அரசியல் நோக்கும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார். திமுக ஆட்சியில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றாலும் சில நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே இது நல்லதும் குறைகளும் கலந்த ஆட்சியாக உள்ளது எனவும் கருத்து தெரிவித்தார்.

“விஜயகாந்த் பாணியை விஜய் பின்பற்றுகிறாரா?” என்ற கேள்விக்கு அவர், “அதை தவெக தலைவர் அவர்களிடமே கேட்க வேண்டும்” என்று சுருக்கமாக பதில் அளித்தார். அதே நேரத்தில், அதிமுக பிரசாரத்தின் போது ஆம்புலன்ஸ் இடையூறு விளைவித்த விவகாரம் குறித்த கேள்விக்கு, “இத்தகைய பிரச்சினைகளை நாங்களும் அடிக்கடி சந்தித்து வருகிறோம்” என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் சுதீஷ் உட்பட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விஜய் மாநாடு கொடிக்கம்பம் விழுந்தது :

விஜய் மாநாடு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் சூழலில் தற்போது கொடி கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் நிர்வாகிகளை விஜய் அழைத்து எச்சரித்துள்ளாராம் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை மிகுந்த பொறுப்புடன் செயல்படவேண்டும் என்றும் விஜய் கூறினார். அந்த மாநாடு கொடி தொண்டரின் கார் மீது விழுந்து நொறுங்கியது அந்த கார் உரிமையாளர் கணளங்கியபடி நிற்கிறார் விஜய் அவருக்கு புதிய கார் தருவாரா அல்லது அதை பழுப்பார்த்து தருவார்களா என்று தகவல் எதுவும் வெளிவரவில்லை.

விஜய் கூட்டணி தயாரா :

யாரெல்லாம் விஜயுடன் கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்று விஜய் தரப்பு ஓபனாக பொதுவெளியில் சொல்லவில்லை ஏனென்றால் பிற காட்சிகள் நடுவில் புகுந்து அவர்களை தன் பக்கம் திருப்பக்கூடும் என்பதால் விஜய் தேர்தல் நெருக்கத்தில் வெளியிடுவார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள், விஜய் கூட்டணி அதிமுகவிடம் விஜய் வைப்பர் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார் என்றும் விஜய் அதற்க்கு மறுப்பு தெரிவிக்காமல் தேர்தல்நேருக்கத்தில் சொல்கிறேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்று

Viewed:

மேலும் பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள

📢 23,000 subscribers

கருத்துகள்

இதுவரை கருத்துகள் இல்லை. உங்கள் கருத்தை பதிவு செய்யவும்!

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்