வேலையில்லா பட்டதாரி படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் தொடர்பான வழக்கில் அப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உயர்நீதிமன்றதில் ஆஜராக விலக்கு அளித்துள்ளது. வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் புகைப்பிடிக்கும் காட்சிகள் எச்சரிக்கை விளம்பரம் தொடர்பான வழக்கில் நாளை ஆஜராக இருந்து ஐஸ்வர்யாவுக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை விளம்பரங்கள் வெளியிடப்படவில்லை என கூறி புகார் அளிக்கப்பட்டது. பொது சுகாதாரத் துறையின் கீழ் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
“25 லட்ச மாச சம்பளத்துக்கு மனைவியா கூப்பிட்றாங்க….” விஷால் பட நடிகையின் வருத்தமளிக்கும் மறுபக்கம்

இந்த நிலையில் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் வழக்கு நேரில் ஆஜராக வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்பிரமணியம் எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதாக தணிக்கை துறை சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதாகவும் எனவே எந்த விதத்திலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சட்ட விடுமுறையை மீறவில்லை எனவும் தெரிவித்துள்ளார் இதனை கேட்ட நீதிபதி நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிற்கு விலக்களித்து வழக்கினுடைய இறுதி தீர்ப்பை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.
