உத்தரப்பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயர்சாதி பிரிவினரின் கட்டளையின் பெயரில் அவர்களின் காலை நக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உத்திரபிரதேச மாநிலம் பரேலியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை சில உயர் சாதிப் பிரிவை சேர்ந்த இளைஞர்கள் மரத்தடியில் கூட்டிக்கொண்டு வந்து அவரை கீழே அமர செய்து அவன் வாயில் கால்களை வைத்து நக்க சொல்லியிருக்கின்றனர். அந்த சிறுவன் தலித் சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் இந்த அநாகரிகமான செயல்கள் அரங்கேறி உள்ளது. அந்த சிறுவன் அவர்களிடம் தன்னுடைய அம்மா வேலை செய்ததற்கான கூலியை கேட்க சென்றிருக்கிறான், பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் அந்த கூலி தொகையை தராததால் அந்த 15 வயது சிறுவன் அவர்களிடம் மன்றாடி கேட்டிருக்கிறான்.

இதனால் ஆத்திரமடைந்த உயர் சாதி இளைஞர்கள் இவனை துன்புறுத்தி, ஒரு உயர் சாதி பெயரை சொல்லி தன் கால்களை நக்க சொல்லி இருக்கின்றனர். இதைப் பார்த்த அங்கிருந்த சக இளைஞர்கள் கைகொட்டி சிரிக்கின்றனர். இந்த சம்பவம் ஏப்ரல் 10-ஆம் தேதி நடந்து இருக்கிறது. இதனால் மிகவும் மனம் நொந்த அந்த சிறுவன் இது குறித்து போலீசாரிடம் கூறியிருக்கிறார். இதனைக் கண்ட போலீசார் உடனே அந்த இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் இது குறித்த விசாரணையை போலீஸார் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Those who claim in India, caste has withered away! A Dalit boy in UP, India is assaulted by a group of upper caste Hindus and was forced to lick their feet. pic.twitter.com/5nxqh2YgWj
— Ashok Swain (@ashoswai) April 19, 2022