Viral Video | சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம் விபத்து | மலையில் விழுந்து பற்றி எறியும் அதிர்ச்சி வீடியோ காட்சி | 133 பேரின் நிலை என்ன ??

சீனாவில் போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளாகி மலையில் விழுந்துள்ளது. தற்போது அதில் பயணித்த 133 பயணிகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

சீனா, குவாங்சி மாகாணத்தில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்துள்ளது. இந்த விமானம் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினுடையாது. போயிங் 737 மற்றும் 737 MAX என இரண்டு பிரிவுகளாக விமானங்கள் உள்ளன. இதில் 737 MAX என்ற விமானம் மட்டும் அடிக்கடி தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றது. ஆனால் அதற்கு முன்பு கண்டுபிடித்த போயிங் 737 ரக விமானம் பெரிய அளவில் கோளாறுகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் குன்மிங் பகுதியிலிருந்து குவாங்சோ நோக்கி சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்து குள்ளனது. 8400 அடி உயரத்தில் விமானம் சென்று கொண்டிருந்தது. 183 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் விமானம் புறப்பட்டு பத்து நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது. அந்த மலையில் விழுந்து நொறுங்கிய அந்த விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து இன்னும் தகவல் அறியப்படவில்லை. மலைப் பகுதியில் விமானம் விழுந்த இடத்தில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. அந்தப் பகுதியில் மீட்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

https://twitter.com/Viirnair/status/1505834246962778112?s=20&t=hhSZpt9EVzwhlVnY__e6mA
https://twitter.com/Viirnair/status/1505834849294176261?s=20&t=hhSZpt9EVzwhlVnY__e6mA
Spread the love

Related Posts

பாடகர் கே.கே.வின் மரணத்திற்கு கொல்கத்தா போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர் | உண்மை என்ன ?

பாடகர் கே.கே.வின் மரணத்திற்கு கொல்கத்தா போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தனுஷுக்கு ரஜினி வீட்டில் இவ்வளவு கட்டுப்பாடுகளா ? தனுஷ், ரஜினி மகள் விவாகரத்து நிஜத்தை உடைத்த தனுஷ்

திருமணம் ஆகி 18 வருடங்கள் மனைவியுடன் வாழ்ந்த தனுஷ் திடீரென தனது விவகாரத்தை அறிவித்து அதிர்ச்சி

Viral Video | சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விராட் கோஹ்லியின் வீடியோ வைரல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று இரவு அவர்களின் டீம் மேட்ஸ்களுக்காக பார்ட்டி ஒன்றை அரேஞ்ச்