பொது இடத்தில் அநாகரீகமாக நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவேற்றிய நபர்களை போலீசார் கண்டித்து அனுப்பியுள்ளனர்
மலையாளத்தில் வெளியான தெம்மா தெம்மா தெம்மாடிக்காதே என்ற பாடலுக்கு மிகவும் ஆபாசமாக நடனமாடி அந்த வீடியோவை அவர்கள் பதிவேற்றி உள்ளனர். முதலில் இந்த பாடலுக்கு இந்த மாதிரியான நடனத்தை ஆடி ஹாஸ்டல் பெண்கள் வீடியோ வெளியிட்டனர்.

அதனால் மிகவும் வைரலான இந்த வீடியோவை பிறகு ஆண்களும் செய்ய ஆரம்பித்தனர் தற்போது அது பொது இடங்களிலும் இவர்களை செய்ய தூண்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


மேலும் இந்த வீடியோ சமூக வலைதளம் எங்கும் வைரலான நிலையில் தூத்துக்குடி போலீஸ் ஆரும் இதனை பார்த்து உள்ளனர். மேலும் அந்த ஆண்களை கூப்பிட்டு கடுமையாக கண்டித்தும் அனுப்பி உள்ளனர் தற்போது இந்த வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.
Tuticorin fellas
— Raj 😷 (@thisisRaj_) November 22, 2022
Before After pic.twitter.com/tYC3CoiIEk