கே.ஜி.எஃப் படத்துக்கெல்லாம் டிக்கெட் காலி ஆயிடுச்சு பீஸ்ட் படத்துக்கு வேணும்னா டிக்கெட்டு தருகிறோம் என்று தியேட்டர் நிர்வாகம் சொல்லிய பிறகு ரசிகர் ஒருவர் பீஸ்ட் டிக்கெட் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்ற வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
கே.ஜி.எஃப் திரைப்படம் உலகமெங்கிலும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியானது இந்தப் படம் வெளியானதிலிருந்து நெகட்டிவ் விமர்சனங்களை மட்டும்தான் பெற்று வருகிறது. இதனால் இந்த படத்திற்கு வரவேற்பு குறைந்து வருகிறது. அதற்கு மறுநாள் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் டிக்கெட் கிடைக்காமல் ரிமாண்டில் சென்று கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு அந்தப் படத்துக்கான வரவேற்பு தமிழ்நாட்டில் கிடைத்தது ஆச்சரியமான ஒன்றாகும். பீஸ்ட் படத்தை ஓரங்கட்டி தமிழ்நாட்டிலேயே கே.ஜி.எஃப் கொடியை பறக்கவிட்டிருக்கின்றனர் கே.ஜி.எஃப படக்குழுவினர்.

இதனைக் கண்டு தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் இருக்கின்றனர். ஏற்கனவே கேஜிஎப் திரைப்படம் கேரளாவில் மோகன்லாலின் ஓடியன் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்து கேரளாவில் இதுவரை வந்த அதிக முதல் நாள் வசூல் என்ற சாதனையை கே.ஜி.எஃப் கேரளாவில் படைத்துள்ளது. அந்த அளவிற்கு இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உலகமெங்கும் இருக்கிறது.

இந்த நேரத்தில் தமிழகத்தில் ஒரு தியேட்டரில் கேஜிஎப் டிக்கெட்டுகள் எல்லாம் விற்று தீர்ந்துவிட்டது பீஸ்ட் டிக்கெட் வேண்டுமானால் தருகிறோம் என்று கூறிய டிக்கெட் கவுண்டர் நபரிடம், பீஸ்ட் டிக்கெட் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் என்று, கூறிவிட்டு சென்ற ஒரு ரசிகரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
“அம்பேத்கருக்கு நிகரானவர் மோடி” – சர்ச்சை பேச்சால் நெட்டிசன்களிடம் திட்டு வாங்கும் இளையராஜா